நான் ஒருநாள் கேரளத்தின் முதலமைச்சராக மாறும்போது நடிகை நவ்யா நாயர் முதல் வரிசையில் கண்ணீரோடு அமர்ந்து இருப்பார் என மலையாள நடிகர் தியான் சீனிவாசன் கூறிய பேச்சு சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் - த்ரிஷா சர்ச்சை
தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ள விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியது. பலரும் அது த்ரிஷா தான் என சொல்லி வரும் நிலையில் விஜய், த்ரிஷா தரப்பு எந்தவித விமர்சனத்திற்கு பதில் சொல்லவில்லை. எனினும் விஜய் பங்கேற்ற சில நிகழ்ச்சிகளில் த்ரிஷா கலந்துக் கொண்டது சர்ச்சையைக் கிளப்பியது. விஜய் மீது ஆயிரம் விமர்சனம் தேர்தலுக்கு முன் வைக்கப்பட்டாலும் மக்கள் அவரை முதலமைச்சராக தேர்வு செய்தனர்.
தியான் சீனிவாசன் கிண்டல்
இப்படியான நிலையில் மலையாள சினிமாவில் விசிட்டர் என்ற படத்தை ராகுல் முரளீதரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தியான் ஸ்ரீனிவாசனும் நவ்யா நாயரும் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் தொடக்கவிழாவில் நடிகர் தியான் சீனிவாசன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. எனினும் அதனை நகைச்சுவையாக எடுக்குமாறு மலையாள சினிமா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிகழ்வில் பேசிய தியான் சீனிவாசன், “எனக்கு மெஸ்ஸியை விட நவ்யா நாயர் தான் பெரிது. இதற்காகவே மெஸ்ஸியுடனான சந்திப்பை தவிர்த்து விட்டேன் என கிண்டலாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நவ்யாவுக்குத் திருமணமாகி ஒரு மகனும் இருக்கும் நிலையில், நாங்கள் ஒரு படத்திற்காக இணைகிறோம். இருந்தாலும் நான் முதலமைச்சராகப் பதவியேற்கும்போது நவ்யா முதல் வரிசையில் கண்ணீருடன் அமர்ந்திருப்பார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
இதனைக் கேட்டு கீழே அமர்ந்திருந்த நவ்யா நாயர் விழுந்து விழுந்து சிரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தியான் பேசும்போது யார் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும் அவர் தமிழ்நாட்டில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கும்போது, நடிகை த்ரிஷா புடவை அணிந்து வந்து கண் கலங்கினாரோ அதனைச் சுட்டிக்காட்டி தான் கூறுகிறார் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read: Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
தியான் சீனிவாசன் - நவ்யா இடையேயான உறவு
மலையாள சினிமா பிரபலங்களான இருவரும் நல்ல நண்பர்களாவர். ஆனால் தனது டீனேஜ் பருவத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நவ்யா நாயர் மீது தனக்கு ஒரு பெரிய ஈர்ப்பு இருந்ததாகவும், அவரைத் திருமணம் செய்ய விருப்பப்பட்டதாகவும் தனது குடும்பத்தினருடன் இருக்கும்போது கூறினார். இதனை நவ்யா நாயர் விளையாட்டாகவே எடுத்துக் கொண்டார். தியான் ஸ்ரீனிவாசன் 2017ம் ஆண்டு அர்பிதா செபாஸ்டியன் என்பவரை திருமணம் செய்த நிலையில், 2010ம் ஆண்டே நவ்யா நாயர் சந்தோஷ் மேனனை திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
