தமிழ் சினிமாவின் ஒரு வித்தியாசமான இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வந்த ஸ்பை த்ரில்லர் படமான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் ஒரு முடிவுக்கு வராமல் நீண்ட நாட்களாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இப்படத்தில் நடிகர் சீயான் விக்ரம் ஒரு சீக்ரெட் ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2016ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கிட்டத்தட்ட ஏழு நாடுகளில் படமாக்கப்பட்ட 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் நிதி பற்றாக்குறையால் நீண்ட நாட்களாக முடங்கி கிடந்தது.  இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தின் ஈர்த்து எதிர்பார்ப்பை அதிகரித்தது. படத்தின் "ஒரு மனம்..." என்ற பாடலும் வெளியானது. ஆனால் அதற்கு பிறகு படம் பற்றின எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்த இடம் தெரியாமல் போனது. 

Continues below advertisement



 


படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் :


கெளதம் மேனன் மற்றும் விக்ரம் இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியானதால் இப்படத்தை ஒத்திவைத்தனர்.  இந்த நிலையில் தற்போது மகிழ்ச்சியான புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் விக்ரம் இருவரும் இணைந்து இப்படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர் என்றும் சீயான் விக்ரம் அவரின் பகுதிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார் என்ற தகவலும் ஏற்கனவே வெளியானது. ஆனால் சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் உடன் நடைபெற்ற நேர்காணலில் அவர் தெரிவிக்கையில் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகும் நிலைக்கு முன்னேறிவிட்டது. படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்பதையும் தெரிவித்துள்ளார். 






உறுதியளித்த கெளதம் மேனன்:


நேர்காணலின்போது கெளதம் மேனன் கூறுகையில் விக்ரம் மற்றும் மற்ற நட்சத்திரங்கள் அனைவரும் அவரவரின் டப்பிங் பகுதியை முடித்துவிட்டனர் என்பதை உறுதி செய்தார். இப்படம் மூன்று மாத இடைவெளியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும்.  இன்னும் சில தினங்களில் VFX பணிகளை மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்தார். உங்களை போலவே இப்படத்தின் ரிலீஸ்காக நானும் காத்து கொண்டு இருக்கிறேன் என்றார். 







துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, திவ்யதர்ஷினி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் வில்லனாக விநாயகன் நடிப்பதாக கூறப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டுள்ளார்.