நடிகர் துருவ் விக்ரம் தன்னுடைய அப்பா கடின உழைப்பாளி என்பதை மகான் செட்டில் தெரிந்து கொண்டதாக பேசியிருக்கிறார். 


விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 31 ஆம் வெளியாக உள்ள கோப்ரா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் விக்ரம், துருவ்விக்ரம், நடிகை ஸ்ரீ நிதிஷெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பேசிய துருவ் விக்ரம், “என்னுடைய அப்பா கடின உழைப்பாளி என்று அனைவருக்கும் தெரியும். அவருடன் ‘மகான்’ படத்தில் பணியாற்றும்போது ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனித்தேன். நீளமான காட்சி ஒன்றில் இருவரும் மும்முரமாக நடித்துக் கொண்டிருந்தோம்.


 






அப்பாவிடம் கற்றுக்கொண்ட பாடம்


ஒரு புள்ளியில் எனக்கு சோர்வு ஏற்பட்டது. ஆனால் அப்பா சோர்வே இல்லாமல், உற்சாகமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம், “என்னப்பா.. எனக்கு எனர்ஜி போய்விட்டது. சோர்வாக இருக்கிறேன். ஆனால் நீ உற்சாகமா இருக்க எப்படி?” எனக் கேட்டேன். அதற்கு அவர், '' இந்த தொழிலில் ஒரு இடத்தை பெறுவதற்காக கடுமையான போராட்டத்தை சந்தித்திருப்பதால்.. இந்த உற்சாகம் தொடர்கிறது என நினைக்கிறேன்” என கூறினார். அவர் பேசி முடித்ததும், அவரைப் பற்ற் நான் யோசிக்க ஆரம்பித்தேன் அவர் ஒரு சிறப்பான மனிதர். இதன் காரணமாகவே அவர் நடித்திருக்கும் 'கோப்ரா' மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.'' என்றார்.


 


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் மகான் படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் கோப்ரா படத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார்.


 






இந்த படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 2 முறை படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போன நிலையில் தற்போது ஆகஸ்ட் 31 ஆம் தேதி கோப்ரா வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விக்ரம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தை பிரோமோட் செய்யும் விதமாக திருச்சி, மதுரை, சென்னை, கொச்சி என பறந்து கொண்டிருக்கிறது.


 



நேற்று (ஆகஸ்ட் 25)  கோப்ரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.