தனது அப்பாவுடன் மகான் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு துருவ் விக்ரம் பேட்டியளித்துள்ளார்.
விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம் ஆகியோரது நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் படம் ‘மஹான்’(Mahaan). கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானது.
விக்ரம் - துருவ் காம்போவில் உருவான மஹான் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஷ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணலாம். மகான் திரைப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரமுடன் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை என்பதால் மகான் திரைப்படத்தை நம்பியிருந்தார் கார்த்திக் சுப்பராஜ்.
இந்தப் படம் விக்ரமின் 60வது படம் என்பதால் படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல் துருவ் விக்ரம் தந்தையுடன் சேர்ந்து நடிக்கிறார் என்பதால் அவர் மீதும் எதிர்பார்ப்பு இருந்தது.
படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில் துருவ் விக்ரம் ஒரு பேட்டியளித்துள்ளார்.
எனக்கு வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்றே ஆசை. காதல் கதையாக இருந்தாலும் அது வித்தியாசமாக இருக்க வேண்டும். ஜோக்கர் ஹாலிவுட் படம் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
படத்தில் நடிக்க ஆரம்பிக்கும்போது பயமும் தயக்கமும் இருந்தது. ஆனால் படம் முழுக்க நான் பயணிக்க அந்த பயமும் தயக்கமும் தான் உறுதுணையாகவே இருந்தது. இந்தப் படத்தில் நான் சிறப்பாக பணியாற்றி மேலே செல்ல வேண்டும் என்ற உந்துதல் என்னுள் இருந்தது. அப்பாவிடமிருந்து என்னை வாட்டி வதைக்கும் வேலை வாங்கும் நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அப்படித்தான் நடந்தது. நான் எனது முழுமையான உழைப்பையும் செலுத்தியுள்ளேன்.
ஆதித்ய வர்மா வெளியான 4 மாதங்களிலேயே அப்பா, மகன் நடிக்கும் இந்தக் கதை எனக்கு வந்தது. இந்த வாய்ப்பு வந்ததுமே அப்பா தான் மிகுந்த ஆனந்தம் அடைந்தார். முதல் படத்திற்குப் பின்னரே அப்பாவுடன் இணைந்து நடித்தது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.
நான் இதனை எனது இரண்டாவது படமாகப் பார்க்கவில்லை. அப்பாவின் 60வது படமாகத்தான் பார்த்தேன். அதனால் அந்தப் படத்தில் நான் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதைத்தான் செய்துள்ளேன் என நம்புகிறேன்.