தமிழ் சினிமாவில் தன்னுடைய அற்புதமான படைப்புகளால் வெற்றியை மட்டுமே நோக்கி பயணம் செய்யும் இயக்குநர் வெற்றிமாறன் 'பொல்லாதவன்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். முதல் படத்தில் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி களமிறங்கி மிக பெரிய வெற்றியை கொடுத்தது. 



ஆடுகளம் கூட்டணி :


அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் - தனுஷ்  2011ம் ஆண்டு கூட்டணி சேர்ந்த படம் தான் 'ஆடுகளம்'. சேவல் சண்டையை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் தனுஷ் ஜோடியாக டாப்ஸி நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து இருந்தார். மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த ஆடுகளம் திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் 2011ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை கைப்பற்றியது. 


 



இப்படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பு அனைவரின் கவனத்தையும் பெற்றது. மிகவும் எதார்த்தமான நடிப்பை தனுஷ் ஒவ்வொரு காட்சியிலும்  வெளிப்படுத்தி இருந்தார். அது தான் அவருக்கு தேசிய விருதினை பெற்று கொடுத்தது. 


இயக்குநர் வாசுதேவ் மேனன் மற்றும் 'மரியான்' படத்தின் இயக்குநர் பரத் பாலா இருவரும் ஒரு முறை கலந்துரையாடலில் ஈடுபட்டு இருந்த போது 'ஆடுகளம்' படத்தில் தனுஷ் நடிப்பு குறித்து பேசி இருந்தார்கள். இருவருமே தனுஷை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


 


தேசிய விருது கிடைக்க காரணம் : 


அவர்கள் பேசுகையில் "ஆடுகளம் படத்தில் இடம் பெற்ற ஒத்த சொல்லால... பாடலில் தனுஷ் தெருவில் இறங்கி டான்ஸ் அடியதற்காக தான் நாங்கள் அவருக்கு நேஷனல் அவார்டு கொடுத்தோம் என இசையமைப்பாளர் பரத்வாஜ் ஒரு முறை கூறியுள்ளார். அது தான் ஒரு ஃபர்பார்மர். அவ்வளவு சீக்கிரம் யாரும் அப்படி இறங்கி நடிக்க மாட்டார்கள். நடுத்தெருவில் நின்று கொண்டு லுங்கியை தூக்கி ஆடுவது மாதிரி டான்ஸ் யாரும் ஆடமாட்டார்கள். அந்த வருடத்தில் தனுஷ் நடிப்பு  வித்தியாசமாக இருந்ததால் தான் அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 


 



எனக்கு அது போன்ற ஒரு ஃபர்பார்மன்ஸ் தான் வேணும். பார்வையாளர்களை வாய்பிளக்க வைப்பது, புல்லா மேக் அப் போட்டுக்கிட்டு வந்து, பல கேரக்டரில் நடிப்பது அல்ல ஃபர்பார்மன்ஸ். இறங்கி செய்ய வேண்டும்" என கூறியிருந்தார் கௌதம் மேனன்.  


தனுஷ் தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிக சிறப்பாக செய்யக்கூடியவர். அப்படி ஒரு கேரக்டர் தான் 'அசுரன்' படத்தில் சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்ததற்காக இரண்டாவது முறையாக தேசிய விருதை பெற்றார்.