சென்னை ரோகினி திரையரங்கில் ஜெயிலர் 2 படத்தின் முதல் காட்சியை நடிகர் தனுஷ் பார்த்தார். ஜெயிலர் 2 படம் குறித்த தனது அனுபவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் தனுஷ் பதிவிட்டுள்ளார்

Continues below advertisement

"ஜெயிலர் 2 திரைப்படம் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். ப்ளாக்பஸ்டர். ஒவ்வொரு தலைவர் ரசிகருக்கும் இது ஒரு விருந்து " என தனுஷ் பதிவிட்டுள்ளார்

ஜெயிலர் 2 படத்தை காண ரஜினிகாந்தின் குடும்பத்தினர் இன்று காலையே சென்னை ரோகினி திரையரங்கு வந்தடைந்தனர். ரஜினியின் இரு மகள்கள் ஐஸ்வர்யா , செளந்தர்யா . ,மனைவி லதா , மற்றும் பேரன்கள் லிங்கா மற்றும் யாத்ரா ஆகியோர் ஜெயிலர் 2 படத்தை பார்த்தனர். 

அதே நேரம் ஜெயிலர் 2 படத்தின் இசையமைப்பாளர் அனிருத் , காவ்யா மாறன் இருவரும் சென்னை ரோகினி திரையரங்கில் படத்தை பார்த்தனர். படம் பார்த்துவிட்டு வந்த அனிருத் பத்திரிகையாளர்களிடம் மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார். "இதற்கு முன்பு எத்தனையோ படங்களை தான் பார்த்திருந்தாலும் ஜெயிலர் 2 தனது மனதிற்கு மிக நெருக்கமான ஒரு அனுபவம் " என அனிருத் தெரிவித்தார். 

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் சிறப்பான  விமர்சனங்களை பெற்று வருகிறது. ரஜினியின் மாஸ் , நெல்சனின் காமெடி , அனிருத்தின் தெறிக்கவிடும் பாடல்கள்  மற்றும் பின்னணி என ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான விருந்தாக படம் அமைந்துள்ளது. அதே நேரம் மோகன்லால் , ஷிவராஜ் குமார் , ஹ்ரித்திக் ரோஷன் ஆகிய நடிகரகள் ரோலில் வந்து படத்தை மேலும் உயர்த்துகிறார்கள்.