ராயன்


தனுஷின் 50வது படமாக உருவாகி இருக்கும் ராயன் (Raayan) படம் வரும் ஜூலை 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது. காளிதாஸ் ஜெயராம் , சந்தீப் கிஷன் , செல்வராகவன் , பிரகாஷ் ராஜ் , துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. 


இந்நிலையில் ராயன் படத்தின் ட்ரெய்லர் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு சார்பாக அதிகார்ப் பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.