துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் கார்த்திக் நரேன். இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ மாறன்’. ஜிவி பிராகஷ் குமார் இசையமைக்கும் இந்தப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகமல் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நேற்றைய கொரோனா தொற்று எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தனுஷின் மாறன் படத்தை படக்குழு ஓடிடியில் வெளியிட உள்ளதாக தெரிகிறது. முன்னதாக தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் தற்போது நானே வருவேன், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாக உள்ள வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று ‘வாத்தி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்