தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இட்லி கடை.
இட்லி கடை - காந்தாரா:
தனுஷுடன் ராஜ்கிரண், நித்யாமேனன், அருண்விஜய், சத்யராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமையற் கலைஞர் நிபுணருக்கும், சமையல் தொழில் அதிபருக்கும் நடக்கும் மோதலே குடும்ப பின்னணியில் கதைக்களமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இட்லி கடை படம் வரும் 1ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கு போட்டியாக காந்தாரா பாகம் 1 படம் வெளியாக உள்ளது. காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்தியா முழுவதும் திரும்பி பார்க்க வைத்தது. கன்னட திரையுலகை காட்டிலும் தமிழ் திரையுலகம் பெரிய திரையுலகமாக இருந்தாலும் காந்தாராவின் முந்தைய பாக வெற்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.
தனுஷிற்கு தலைவலியாக மாறிய காந்தாரா:
இதனால், காந்தாரா பாகம் 1 மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சங்ககாலத்தில் நடப்பது போல கதைக்களம் உருவாகியுள்ள நிலையில், ரிஷப்ஷெட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டிலும் இட்லி கடை படத்தை காட்டிலும் காந்தாரா படத்தின் மீதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது. இது இட்லி கடைக்கு சற்று அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஏனென்றால், இயக்குனராக ராயன் படம் தனுஷிற்கு தோல்விப்படமாக அமைந்தது. இதனால், இட்லி கடை படத்தை வெற்றிப்படமாக மாற்ற அவர் முயற்சித்து வருகிறார்.
ஆயுத பூஜை, விஜயதசமி பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறையால் படம் நல்ல வசூல் குவிக்கும் என்று கருதி படத்தை 1ம் தேதி வெளியிடுகின்றார் தனுஷ். அதேநாளில் பான் இந்தியா படமாக வெளியாகும் காந்தாரா படம் இட்லி கடை மிகப்பெரிய அளவில் போட்டியாக அமைந்துள்ளது.
வெற்றி பெறப்போவது யார்?
இட்லி கடையை காந்தாரா காணாமல் போகச் செய்யுமா? காந்தாராவை வீழ்த்தி இட்லி கடை வெற்றிகரமாக ஓடுமா?என்ற போட்டி உருவாகியுள்ளது. காந்தாரா படத்தின் ட்ரெயிலரே ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவையா போன்ற நட்சத்திரங்கள் உள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். அர்விந்த் காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ஹோம்பலே ப்லிம்ஸ் தயாரித்துள்ளது.
இட்லி கடை படத்தை தனுஷ் இயக்கியிருப்பதுடன் தனுஷின் உண்டர்பார் ப்லிம்ஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் விநியோகிஸ்துள்ளது. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கிரண் கெளசிக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.