நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் வெளியானதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 


துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12  ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்துள்ள நிலையில் படம் இன்று தியேட்டர்களில் வெளியானது. 








பல இடங்களில் காலை 4 மணி காட்சிகள் இல்லாமல் 8 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், சில ஊர்களில் மட்டும் சிறப்பு காட்சிகள் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டது. இதனால் நள்ளிரவு முதலே தனுஷ் ரசிகர்கள் தியேட்டர்களில் குவியத் தொடங்கினர். கட் அவுட், பேனர், மேளதாளம் என தியேட்டர்களை திருவிழா நடக்கும் இடமாகவே ரசிகர்கள் மாற்றி விட்டனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 



 

மேலும் படம் ஹாரர் படமாக இருப்பதாகவும், தனுஷ், செல்வராகவம், யுவன் காம்போ அல்டிமேட்டாக இருப்பதாகவும் ட்விட்டரில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மதுரையில் உள்ள ஒரு தியேட்டரில் படம் வெளியாவதை முன்னிட்டு சாலையில் அதன் சந்தோஷத்தை கொண்டாடிய ரசிகர்கள் அவ்வழியாக சென்ற அரசுப் பேருந்தை மறித்தனர். இதனால் அவ்வழியாக சென்றவர்கள் உட்பட அனைவரும் அவதியடைந்தனர். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் மக்களை அவதிக்குள்ளாகாத வகையில் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளனர்.