Dhanush Idly Kadai Review: தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தின் காட்சிகள், வெளிநாடுகளில் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், அதுதொடர்பான விமர்சனங்களும் வெளிவர தொடங்கியுள்ளன.
இட்லி கடை
ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. ஜி. பிரகாஷ் இசையமத்துள்ள இந்த படத்தில், ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தனுஷ் உடன் சேர்ந்து ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார். கிராமத்தில் இருக்கும் இட்லி கடையை மையப்படுத்தி தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான பாசத்தையும், கார்ப்ரேட் உலகை சேர்ந்த வில்லனால் தனுஷ் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் அடிப்படையாக கொண்டு இந்த இட்லி கடை திரைப்படம் உருவாகி இருப்பதை ட்ரெய்லர் காட்டியது. இந்நிலையில், இந்த படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது. தமிழ்நாட்டில் 9 மணிக்கு மேல் தான் முதல் காட்சி தொடங்கினாலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படத்தின் காட்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அங்கு படம் பார்த்தவர்கள் இட்லி கடை படத்தின் விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன.
இட்லி கடை எப்படி இருக்கு? நெட்டிசன்ஸ் விமர்சனம்