’மயக்கம் என்ன' கேரக்டர் உண்மையில் யாரு?- தனுஷ், செல்வராகவன் ‘கலாட்டா’ ட்வீட்

உண்மையான மயக்கம் என்ன கேரக்டர் செல்வராகவன்தான் என தனுஷ் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement

இயக்குநர் செல்வராகவன் உருவாக்கத்தில் தனுஷ் ரிச்சா நடிப்பில் 2011ல் வெளியானது ’மயக்கம் என்ன?’ திரைப்படம். படத்தில் தனுஷின் மீது மரத்தின் இலை ஒன்று விழுவது போன்று அமைந்த காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. படம் வெளியாக 10 ஆண்டுகள் ஆகவிருக்கும் நிலையில் தற்போது அந்தக் காட்சியில் செல்வராகவனை பொருத்தி வரைந்து ட்வீட் செய்திருந்தது பிரபல ஊடகம். இந்த நிலையில் அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்து தனுஷும் செல்வராகவனும் உரையாடியுள்ளது. தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. உண்மையான மயக்கம் என்ன கேரக்டர் செல்வராகவன்தான் என தனுஷ் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement

முன்னதாக, நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரது அடுத்தபடம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வந்தது. இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடிக்கும் 44-வது திரைப்படத்தின் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

மித்ரன் கே ஜவஹர் இயக்கும் இந்த படத்திற்கு திருச்சிற்றம்பலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்தப்படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.. 

அண்மையில் நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி ’மாறன்’ என்கிற அவரது 43வது படத்தின் டைட்டில் வெளியான நிலையில் தற்போது 44வது படத்துக்கான டைட்டிலும் வெளியாகி இருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மூலமாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அவரது 43வது திரைப்படம் உருவாகி வருகிறது. கார்த்திக் நரேன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola