தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்யாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து... அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருபவர் தனுஷ். நடிப்பு 'ராட்சசன்' என பெயரெடுத்த தனுஷ், தன்னுடைய திறமையான நடிப்பைபறைசாற்றும்தேசியவிருதுகளையும்பெற்றுள்ளார்.
அதேபோல் கோலிவுட் திரை உலகை தாண்டி டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், படங்களிலும்நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக இவருடைய 50-ஆவது திரைப்படமாக 'ராயன்' படம்வெளியாகி, நல்லவரவேற்பைபெற்றதோடு, ரூ.100 கோடிவசூல்சாதனையைபடைத்தது.
இதைத்தொடர்ந்து, நேற்றுவெளியான 'குபேரா' திரைப்படம், கலவையானவிமர்சனங்களைபெற்றுவருகிறது. தெலுங்கு திரைப்பட இயக்குனர் சேகர் காமுலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கியரோலில்நடித்துள்ளார். குறிப்பாக தனுஷ் இந்த படத்தில் ஒரு பிச்சைக்காரராக நடித்து பலரையும் வியப்படையச் செய்துள்ளார்.
'குபேரா' திரைப்படத்தை ரூ.90 கோடி பட்ஜெட்டில் எடுத்து முடிக்க பட குழு திட்டமிட்ட நிலையில், இதுவரை 120 கோடி பட்ஜெட் செலவு செய்யப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. மேலும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷ் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்தை, தனுஷ் தன்னுடைய மகனுடன் சேர்ந்து நேற்றுரோகிணிதிரையரங்கில்பார்த்துரசித்தார்.
படம் வெளியானது முதல் ரசிகர்கள் கலவையானவிமர்சனங்களேகிடைத்துவளர்கிறது. படம் 3 மணிநேரம்ஓடுவதுரசிகர்களின்பொறுமையைசோதிப்பதாகஉள்ளது. அதேநேரம்தனுஷின்நடிப்புக்குபாராட்டுக்கள்குவிந்துவருகிறது. இந்நிலையில், 'குபேரா' திரைப்படத்தின்முதல்நாள்வசூல்குறித்ததகவல்தற்போதுவெளியாகிஉள்ளது. அதன்படி, 'குபேரா ' முதல்நாளில்ரூ.13 கோடிமட்டுமேவசூல்செய்துள்ளதாம். இதுஏற்கனவேதனுஷ்நடிப்பில்ரிலீஸ்ஆன 'ராயன்' படவசூலைவிடமிகக்குறைவு. 'ராயன்' திரைப்படம்முதல்நாளில்ரூ.15.7 கோடிவசூல்செய்ததுகுறிப்பிடத்தக்கது.
