நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஜெனிலியா நடிப்பில் உருவான உத்தமபுத்திரன் படம் வெளியாகி இன்றோடு 13 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


மித்ரன் ஆர் ஜவஹருடன் கூட்டணி அமைத்த தனுஷ்


நடிகர் தனுஷின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் யாரடி நீ மோகினி. இந்தப் படத்தை இயக்குனர் செல்வராகவனின் உதவியாளராக இருந்த மித்ரன்.ஆர்.ஜவஹர் இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் தனுஷ் உடன் குட்டி படத்தில் இணைந்து பணியாற்றினார்.


அதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மித்ரன் ஆர். ஜவகர் உத்தமபுத்திரன் படத்தை தனுஷை வைத்து இயக்கினார். இந்தப் படத்தில் ஜெனிலியா, ஸ்ரேயா, பாக்யராஜ், விவேக், ஆஷிஷ் வித்யார்த்தி, கருணாஸ்,மயில்சாமி, ஆர்த்தி,  ரேகா அம்பிகா, ஜெயபிரகாஷ் ரெட்டி, மொட்ட ராஜேந்திரன், சுரேகா வாணி, விஜய் பாபு, ராஜலட்சுமி, உமா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி படத்திற்கு இசையமைத்திருந்தார்.


படத்தின் கதை


பாக்கியராஜ், மோகன் பாபு உள்ளிட்ட பலரும் அடங்கிய பெரிய குடும்பத்தின் பையனான தனுஷ், தனது மாமா மகளான ஸ்ரேயா காதலுக்கு ஆதரவளித்து அவர் திருமணத்தன்று வீட்டை விட்டு வெளியேற உதவி செய்கிறார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் கோபத்துடன் இருக்க தனுஷ் தலைமறைவு ஆகிறார். இதனிடையே அவர் நண்பர் ஒருவர் காதலுக்கு உதவி செய்ய போய் பிரச்சினையில்  சிக்கிக் கொள்கிறார். அதாவது மணப்பெண்ணுக்கு பதிலாக தவறான மண்டபத்திற்கு சென்று அங்கு மணப்பெண்ணாக இருக்கும் ஜெனிலியாவை கடத்தி விடுகிறார்.


இதன் பின்பே ஜெனிலியாவுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும், சொத்துக்காக இந்த திருமணம் நடக்க இருப்பதும் தெரிய வருகிறது. அதேசமயம் அவரது மாமாக்களான ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் ரெட்டி இருவரும் ஜெனிலியாவை தேடி வர தனுஷ் தனது குடும்பத்திற்குள் அவரை ஒளித்து வைக்கிறார. 


இதனுடைய தனுஷ் மற்றும் ஜெனிலியா இடையே காதல் உருவாகி இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகும் நிலையில், மாமாக்களால் ஜெனிலியா கடத்தப்படுகிறார். இதன் பின்னர் குடும்பத்துடன் சென்று தனுஷ் தனது காதலியான ஜெனிலியாவை எப்படி மீட்டார் இருவருக்கும் எப்படி திருமணம் நடந்தது என்பதை இப்படத்தின் கதை ஆகும். 


கூடுதல் தகவல்கள்



  • உத்தமபுத்திரன் படம் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ரெடி படத்தின் ரீமேக் ஆகும். ஆனால் இந்த படத்தின் திரைக்கதை மிகப் பெரிய அளவில் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. அதனால் கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்றது.

  • உத்தமபுத்திரன் படத்தில் எமோஷனல் ஏகாம்பரம் என்ற காமெடி கேரக்டரில் விவேக் நடித்திருந்தார். படத்தில் பெரும்பாலான காட்சிகள் இவர் வசனம் பேசாமல் இருக்கும் நிலையில் மிகப்பெரிய அளவில் இந்த காமெடி ஹிட்டானது.

  • அதேசமயம் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் ஜெயபிரகாஷ் ரெட்டி இருவரும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என காட்சிப்படுத்தப்பட்டதோடு, அவர்களை மட்டம் தட்டும் வகையில் வசனங்கள் வைக்கப்பட்டதால் சில மாவட்டங்களில் இப்படம் தடை செய்யப்பட்டது சில இடங்களில் வசனங்கள் நீக்கப்பட்டு வெளியானது.

  • மேலும் இப்படத்தின் இரண்டாம் பாதி கிட்டதட்ட மெகா சீரியல் போல் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

  • உத்தரமபுத்திரன் படத்தில் விஜய் ஆண்டனியின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. குறிப்பாக உச்சுமல்லாரிசே, இடிச்ச பச்சரிசி, கண் ரெண்டில் மோதி, என் நெஞ்சில்  ஆகிய அனைத்து பாடல்களும் ரசிகர்களின் பேவரைட் ஆக அமைந்தது.