இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ்(Dhanush). இவருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்து ட்வீட் செய்திருக்கிறார். இதே குறிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஐஸ்வர்யா தனுஷ், “கேப்ஷன் தேவையில்லை என நினைக்கிறேன். உங்கள் அனைவரின் புரிதலும், அன்பும்தான் மிக தேவையானது” என குறிப்பிட்டிருக்கிறார்.
கோலிவுட்டின் மிக கவனிக்கத்தக்க ஜோடிகளில் ஒன்றான தனுஷ் - ஐஸ்வர்யாவின் பிரிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், தனுஷின் பழைய வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் மீண்டும் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் தனுஷ் ஒரு பின்னணி பாடகராக 'புதுக்கோட்டைலிருந்து சரவணன்' படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பின்பு நிறைய ஹிட் பாடல்களை தனுஷ் பாடியுள்ளார். அந்த வரிசையில், நிஜ வாழ்க்கையில் அவர் பாடல் பாடி அசத்திய வீடியோதான் மிக வைரலானது. அவர் மனைவி ஐஷ்வர்யா தனுஷுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு பாடல் பாடி இருந்தார். அந்த வீடியோதான் அது.
தனுஷ் பாடலைப் பாடுவதும், ஐஸ்வர்யா தனுஷின் அழகிய வெட்கம் கலந்த அழகான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை பகிர்ந்து, எப்படி இருந்த ஜோடிகள், பிரிவை அறிவித்துவிட்டார்களே என ரசிகர்கள் கவலையை பதிவிட்டு வருகின்றனர்.
தனுஷ் 16 வயதில் சினிமாவில் அறிமுகமானவர். இவர் 22 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினியை காதலித்து கரம் கரம்பிடித்தார். தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினி(aishwarya rajinikanth) திருமணம் 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது. தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடிக்கு, யாத்ரா - லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தனுஷ் பல உயரங்களை தொட்டார். கோலிவுட்டின் கவனிக்கத்தக்க ஜோடிகளில், தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடியும் ஒன்று. ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனுஷின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இரு வரும் விவாகரத்து அறிவித்திருப்பது கோலிவுட்டில் அதிர்ச்சியை உண்டாகி இருக்கிறது.