சதுரங்க வேட்டை மூலம் தனது ட்ரேட்மார்க்கை தமிழ் சினிமாவில் பதித்தவர் ஹெச்.வினோத். இவர் தீரன் அதிகாரம் ஒன்று ,நேர்கொண்ட பார்வை,வலிமை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.இவர் தற்போது அஜித்தை வைத்து 'துணிவு' படத்தை இயக்கியிருக்கிறார்.இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.



                                           


இதனை தொடர்ந்து கமல் ஹாசனை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக சமீபத்தில் கூறப்பட்டது. அது மட்டுமின்றி தனுஷை வைத்தும் ஒரு படம் இயக்க விருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தை மாஸ்டர்,கோப்ரா ஆகிய படங்களை தயாரித்த லலித் குமாரின் '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் ஒப்பந்த வேலைகள் நடைபெற்று வருகிறதாம். இத்திரைப்படம் தனுஷின் 50 வது திரைப்படமாகும்.



                       


தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இயங்கி வருகிறார்.'வாத்தி' திரைப்படத்தில் இவர் நடித்து முடித்து விட்டார்,அப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.'வாத்தி' திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து,சேகர் கம்முலா ,மாரி செல்வராஜ் ஆகியோர் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தை முடித்த பிறகு ஹெச். வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறாராம்.