தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். காதல் கொண்டே, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்ஜிகே உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். சமீபகாலமாக படம் இயக்குவதைக் காட்டிலும் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
செல்வராகவன்:
திரையுலகை சேர்ந்த இயக்குனர்கள், தங்களின் படங்களில் நடிக்கும் நடிகைகளை காதல் திருமணம் செய்து கொள்வது பல வருட வழக்கமாக இருக்கும் நிலையில், இயக்குனர் செல்வராகவனும் தான் இயக்கிய காதல் கொண்டேன், ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்த சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார்.
சில வருடத்திலேயே சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த இவர், பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி கீதாஞ்சலி என்கிற தன்னுடைய துணை இயக்குனரையே காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது செல்வராகவன் - கீதாஞ்சலி ஜோடிக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய மனதில் படும் கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
உண்மையான காதல் எது?
அந்த விதத்தில், இப்போது உண்மையான காதல் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்று செல்வராகவன் கூறியிருக்கிறார். இதுகுறித்து மிகவும் உணர்வு பூர்வமாக பேசியுள்ள செல்வா... "காதலிக்கும் போது ஆரம்ப காலகட்டங்களில் யாராக இருந்தாலும் என்னதான் தன்னிடம் எதிர்மறையான பண்புகள் இருந்தாலும், அதனை வெளிக்காட்டாமல் நேர்மறையான பண்புகள் அல்லது குணங்களை மட்டுமே வெளிக்காட்டுவர்கள். இது எல்லோருக்கும் பொதுவான இயல்பு தான். இதற்கு காரணம் எதிர்மறையான குணங்களை பற்றி தெரிந்து விட்டால் நம்மை விட்டு சென்றுவிடுவார்களோ என்ற பயன் தான்.
இதுவே காதல் திருமணத்திற்கு பிறகு நேர்மறையான குணங்கள் குறைந்து எதிர்மறையான குணங்கள் வெளிப்படுகிறதோ அப்போது புரிய வரும். எங்கு, எது உண்மையான காதல் என்று. உங்களிடம் எதிர்மறையான குணங்கள் இருந்து அதனை ஏற்றுக்கொண்டு உங்களை நல்வழிப்படுத்துவதே அந்த உண்மையான காதலின் வேலையாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும், காதலிக்கும் போது ஒருவரிடமிருந்த அதே குணங்கள் திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் எல்லோரிடமும் இருப்பதில்லை. ஏனென்றால், காதலிக்கும் போது எங்கு நம்மை விட்டு சென்றுவிடுவார்களோ, ஏமாற்றிவிடுவார்களோ என்று ஒரு வித பயம் இருந்து கொண்டே இருக்கும். இதுவே திருமணம் ஆன பிறகு ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நம்மை விட்டு போக முடியாது என்று ஒரு ஆணவம், திமிரு வரும். அப்போதுதான் ஒருவருடைய எதிர்மறையான குணங்கள் வெளிப்படும்.
அதிகரிக்கும் விவாகரத்து:
யாருமே காதல் திருமணத்திற்கு பிறகு அதே குணங்களை யாரிடமும் எதிர்பார்க்க கூடாது. ஆனால், திருமணத்திற்கு பிறகும் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்வதே காலங்காலமாக நிலைத்து நிற்கும். இதில் பெரும்பாலான காதலர்கள் தோற்றுவிடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே ஜெயிக்கிறார்கள்.
இன்றைய உலகில் விவாகரத்து என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு சட்ட நெறிமுறைகளும் கடுமையாக இல்லாததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இது எளிதில் விவாகரத்து கிடைக்க வழி வகை செய்கிறது. ஒருவருக்கொருவர் சரியாக புரிந்து கொள்ளாததும், இனிமேல் தங்களுக்குள் ஒத்து வராது என்பதை புரிந்து கொண்டதாலும் தான் இன்றைய உலகில் நீதிமன்றத்தை நாடிச் செல்கிறார்கள்.
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து தீர்ப்பு:
அதனை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். அன்றைய காலகட்டம் மாதிரி எல்லாம் இப்போது கிடையாது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றெல்லாம் சொன்னாங்க. அதற்கேற்ப ஆண்களும் ஆட்டம் போட்டாங்க. ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்ல. பெண்களும் ஆண்களுக்கு நிகராக முன்னேற்றம் அடைந்து விட்டார்கள். அவர்களுக்கும் சம உரிமையும் இருக்கிறது.
காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு வாழ்வதே இன்றைய உலகில் விவாகரத்தை குறைக்க உதவும் என்று கூறியிருக்கிறார். தனுஷ் விவாகரத்து பெரும் இந்த சமயத்தில் செல்வாவின் கருத்து கவனம் பெற்றுள்ளது.