பாலிவுட்டின் பிரபல சின்னத்திரை நடிகையாக கலக்கி வருபவர் தேவோலீனா பட்டாச்சார்ஜி. கடந்த ஆண்டு இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 13-இல் கலந்துகொண்டு பலருக்கு பரிச்சயமானார். இரண்டு வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பிரபல ஃபிளிப்கார்ட் நிறுவனம் தயாரித்து வரும்   Ladies Vs Gentlemen Season 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தனது சிறு வயதில் நடந்த பாலியல் வன்முறை குறித்து பகிர்ந்துள்ளார்.


 அதில் பேசிய தேவோலீனா “ எனது  சிறுவயதில் நன்மதிப்பை பெற்ற கணித ஆசிரியர் ஒருவரிடம் நானும் எனது நண்பர்கள் இருவரும் டியூஷன் சென்றோம். ஒரு வாரத்திற்கு பிறகு எனது நண்பர்கள் டியூஷனுக்கு வரவில்லை. நான் கேட்ட போது ஆசிரியர் தங்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அது குறித்து சாரின் மனைவியிடம் புகார் அளித்தோம். பின்னர் நான் மட்டும் டியூஷன் சென்றேன். அவர் என்னிடமும் தவறாகவே நடந்துக்கொண்டார்.இது குறித்து எனது பெற்றோரிடம் புகார் அளித்ததும் , அவர்கள் நேரடியாக ஆசிரியரின் மனைவியிடம் புகார் அளித்தனர். சிறிது காலத்திற்கு பிறகு எனது இரண்டு தோழிகளும் டியூஷனை விட்டு வெளியேறினர். நாங்கள் எதாவது கடுமையான ஆக்‌ஷன் எடுப்பர்கள் என நம்பினோம். 






ஆனால் சமூகம் என்ன சொல்லும்? எல்லோரும் என்ன சொல்வார்கள்?’ என் குடும்பமும் அப்படித்தான் நினைத்தது!  அதனால்தான் அவர்கள் காவல்துறையிடம் செல்லவில்லை, கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று நான் எனக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணர்கிறேன். மேலும் உங்கள் குழந்தைகள் இது போல உங்களிடம் வந்து சொன்னால் உடனே கடுமையான நடவடிக்கை எடுங்கள் என கூறியுள்ளார்“ இந்த வீடியோவை பகிர்ந்த ஃபிளிப்கார்ட் தேவோலீனா பட்டாச்சார்ஜியை துணிச்சலான பெண் என பாராட்டியுள்ளது.






Ladies Vs Gentlemen கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இதில் ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொள்கின்றனர். இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கு எந்த அணியினர் சிறப்பாக பரிசளிக்கிறார்களோ அவர்களுக்கு ஃபிளிப்கார்ட் வழங்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.  Ladies Vs Gentlemen Season 2 நிகழ்ச்சியை ஹாசினி புகழ் நடிகை ஜெனிலியாவும் அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் தொகுத்து வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.