கேன்ஸ்..


கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அழகான ஆரஞ்சு உடை நடப்பதற்கு அசவுகரியமாக இருக்க சிரமப்பட்ட தீபிகா படுகோனை நெட்டிசன்கள் கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.


பிரான்ஸ் நாட்டில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியாவிலிருந்து தீபிகா படுகோன் நடுவராக சென்றுள்ளார்.


இந்நிலையில் அன்றாடம் அவரது ஆடை அலங்காரங்கள் கவனம் பெற்று வருகின்றன. இதுநாள் வரை ஸ்டைல் திவா தீபிகா படுகோனே என்று புகழ்ந்து வந்த நெட்டிசன்கள் இன்றைய ஆடையை வைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி உலாவ விட்டுள்ளனர்.





ஆரஞ்சு நிற உடை..


கேன்ஸ் விழாவின் 7வது நாளான இன்று தீபிகா படுகோனே ஆரஞ்சு நிற உடையில் சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடக்க முயன்றார். அந்த ஆடையில் அவர் அழகாகவே இருந்தார். ஆனால் ஆடை அசவுகரியமாக இருந்தது. ஆடையின் பின்புறம் இரு அடுக்குகளில் ட்ரெய்ல் இருக்க அதை எடுத்துக் கொண்டு நடக்க தீபிகா பாடாய்பட்டார். தீபிகா படுகோன் பட்டபாட்டைப் பார்த்து இது தேவையா என்று ஆரம்பித்த நெட்டிசன்கள் விதவிதமாக மீம்ஸ் போட்டனர். 


தீபிகாவுக்கு இந்த ஆடையை வடிவமைத்துக் கொடுத்த டிசைனருக்கு இந்நேரம் வேலை போயிருக்கும் என்று கொளுத்திப் போட்டார் ஒருவர். அவருடைய ஆடையை அட்ஜெஸ்ட் செய்ய விழுந்து விழுந்து சேவகம் செய்ததாக அங்கிருந்த ஆண்களை கிண்டல் செய்திருந்தார் இன்னொருவர். இப்படி டிசைன் டிசைனாக தீபிகாவை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.


கேன்ஸ் திரைப்பட விழாவின் 75 வது ஆண்டும் இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75 ஆண்டும் ஒன்றாக வந்துள்ளதால், இந்தியா இவ்விழாவில் கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சார்பில் 75 பேர் இவ்விழாவிற்கு சென்றுள்ளனர். மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டார்.