புது டாட்டூவுடன் இண்டர்நெட்டில் வளம் வரும் தீபிகா படுகோனின் ஆஸ்கர் புகைப்படம்!


தீபிகா படுகோன் தனது ஆஸ்கர்  2023 நிகழ்வில் தனது அசத்தலான தோற்றத்தின் மூலம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அசத்தலான தோற்றத்துடன், தீபிகாவின் புதிய டாட்டூவும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பதான் நடிகை தீபிகா, ஆஸ்கர் 2023 இல் விருது வழங்குபவராக கலந்து கொண்டார்.எப்போதும் போல, தீபிகா படுகோன் தனக்கெனப் ப்ரத்தியேகமாக செய்யபட்ட கருப்பு நிற உடையில் எளிமையான அழகில் ஜொலித்தார். உடன் அவர் வைர நெக் பீசும் அணிந்திருந்தது கூடுதல் அழகை சேர்த்தது.எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் புதிய டாட்டூ பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.


 
புதிய டாட்டூவுடன் போஸ் கொடுக்கும் தீபிகா!
பாலிவுட் முன்ணனி நடிகையான  தீபிகா படுகோன் அன்மையில் ஆஸ்கரில் கலந்து கொண்டு அந்த புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். அதில் அவர் புதிதாக கழுத்தில் போட்டிருக்கும் டாட்டூ அவரது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பையும் லைக்ஸையும் பெற்று வருகிறது. அவர் தனது ஸ்கின் கேர் ப்ராண்ட் 82°E என்பதை தனது கழுத்தில் மையிட்டிருக்கிறார்.  இந்நிலையில் அவரது  புதிய டாட்டூ, டாட்டூ பிரியர்களின் பெரும் கவனத்தை பெற்று வருகிறது.


தீபிகா - டாட்டூ காதலி!
தீபிகா படுகோன் எப்போதும் கலை மற்றும் டாட்டூ மீதும் அதீத விருப்பம் கொண்டவர்.  இதற்கு முன்னதாகவே அவர் கழுத்தில் தனது முன்னாள் காதலரான ரன்பீர் கப்பூரின் நினைவாக RK என்று மையிட்டிருந்தார். பிறகு இருவரும் பிரிந்ததால் அந்த டாட்டூவை நீக்கிவிட்டார். தீபிகா மேலும் சில டாட்டூகளையும் கொண்டுள்ளார். அதில் அவர் கணுக்காலில் போட்டிருக்கும் டாட்டூவும் அடங்கும்.