சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ்  நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள படத்திற்கு குபேரா என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது.


தனுஷ்


கேப்டன் மில்லர் படத்தில் தாண்டவமாடிய தனுஷ் ராயன் படத்தின் அப்டேட்களை அள்ளி வீசி வருகின்றார்.  தனுஷ தன்னைதானே செதுக்கிய ராயன் படத்திற்கு அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா தனுஷுக்கு இணையாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்  வெளியாகியுள்ளது



இப்படியான நிலையில் இன்று மாலை 4 மணி ஐந்து நிமிடத்திற்கு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப் பட்டது.  ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறுகளால் படத்தின் அப்டேட் வெளியிடுவதில் காலதாமதம் ஆகிவிட்டது. இறுதியாக படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் மாலை 6.30 மணிக்கு வெளியானது. இந்த படத்திற்கு குபேரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசை அமைக்கின்றார். 


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் கோலிவுட் மட்டுமில்லாமல், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிப்பெற்றது. பீரியட் ஜானரில் எடுக்கப்பட்ட கேப்டன் மில்லர் படத்தில் ஆக்‌ஷன்களில் அசத்தி வரவேற்பை பெற்றிருந்தால் நடிகர் தனுஷ். 

 

கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து அவரே இயக்கும் டி50 படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது மட்டுமில்லாமல், தனது அக்கா மகன் ஹீரோவாகவும், நடிகை அனிகா சுரேந்திரன் நடிக்கும் “ நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்ற படத்தையும் தனுஷ் தயாரிக்கிறார். இது மட்டுமில்லாமல், இயக்குநர் ஷேகர் கம்முலா இயக்கும் டி51 படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா உள்ளிட்ட பர் நடிக்கின்றனர். படத்தை ராம்மோகன் ராவ் மற்றும் சுனில் சாரங்க் இணைந்து தயாரிக்கின்றனர்.