நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், டோலிவுட்டின் பிரபல நடிகருமான நாக சைதன்யா முதன்முறையாக இயக்குநட் வெங்கட் பிரபுவுடன் கைக்கோர்த்த படம் கஸ்டடி.


க்ரித்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் கடந்த மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 


'மாமனிதன்' படத்துக்குப் பிறகு இளையராஜாவும் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். சுமார் 30 கோடிகள் செலவில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


சென்ற ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இந்தப் படத்தின் டீசரும், மே மாதம் இந்தப் படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.


ஆனால், வழக்கமான வெங்கட் பிரபு படம் போல் அல்லாமல் இந்தப் படம் வெளியான நாள் முதலே பரவலாக நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வந்தது.


தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் வெளியான நிலையில், தெலுங்கு ஆடியன்ஸைக் கவரும் வகையில் மட்டுமே இப்படம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.


திரையரங்குகளில் எதிர்பார்த்த வசூலைக் குவிக்காமல் மொத்தமாக இப்படம் படுத்த நிலையில்,  விரைவில் ஓடிடி தளத்தில் கஸ்டடி வெளியாக உள்ளது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கியுள்ள நிலையில், இப்படம் நாளை மறுநாள்  (ஜூன்.09) திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் விஜய்யுடன் கைக்கோர்த்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.