தனிமையில் இருக்கும்போது சினிமா தான் எனக்கு கைக்கொடுக்கும் என முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

Continues below advertisement

2025ல் எனக்கு பிடித்த படங்கள்

2025ம் ஆண்டில் எனக்கு ரொம்ப பிடித்த படமாக சசிகுமார் நடித்த “டூரிஸ்ட் பேமிலி” அமைந்தது. அதேசமயம் சரத்குமார் நடித்த 3 பிஹெச்கே படமும் அமைந்திருந்தது. நான் முன்பெல்லாம் படம் ரிலீசானால் தியேட்டருக்கு சென்று தான் பார்ப்பேன். முதல் நாள் முதல் காட்சி எல்லாம் போய் பார்ப்பேன். அஞ்சாதே படத்தின் முதல் காட்சி பார்க்கும்போது 8 பேர் தான் இருந்தார்கள். உலக நாடுகளுக்கு பயணப்படும்போதும், தனிமையில் இருக்கும்போது சினிமா தான் எனக்கு கைக்கொடுத்தது. நடிகர் விஜய்அல்லது  அஜித்குமார் படம் வருகிறது என்றால், ஒரு ரசிகனாக நான் அதை எதிர்நோக்குவேன்

சினிமாவில் அழகு என்பது நாம் என்ன மாதிரியான விஷயத்தை கற்றுக் கொள்கிறோம் என்பது தான். ஒரு படத்தை பார்க்கும்போது அதில் கூறப்பட்டுள்ள அனுபவம் என்னை தாக்குவது, தூங்க விடாமல் செய்வது இருக்கும். அது டூரிஸ்ட் பேமிலி மற்றும் 3 பிஹெச்கே படங்களில் இருந்தது. 

Continues below advertisement

கூலி படம் மோசம் இல்லை

ஒரு பக்கம் வசூல் சாதனை படைக்கும் படங்கள் இருந்தாலும், நான் எதிர்பார்ப்பது பொழுதுப்போக்கான படங்கள் தான். அதில் ஒரு ரியாலிட்டி இருக்க வேண்டும் என நினைப்பேன்.  ஒரு படத்தில் இருக்கும் அத்தனை கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுவதால் தான் மலையாள சினிமா தனித்து தெரிவதாக நான் நினைக்கிறேன். அப்படியான ஒரு விஷயத்தை டூரிஸ்ட் பேமிலி படம் செய்தது. 

என்னை கவர்ந்த படங்கள் நிறைய உள்ளது. அது இந்த மொழி என்பது இல்லை. அதேசமயம் ஓடிடி தளங்கள் வந்த பிறகு ஏற்பட்ட கவலை ஒன்று உள்ளது. அது மிகப்பெரிய பிரச்னை என்றே சொல்லலாம். இந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வந்தது. அந்த படம் திருப்திப்படுத்தவில்லை என்பது பெரும்பாலனவர்களின் கருத்தாக இருந்தது. விமர்சனம் செய்தவர்கள் அதில் இருந்த 10 விஷயத்தை சுட்டிக்காட்டலாம். ஆனால் எனக்கு அதில் பெரிய அளவில் தவறு இருந்ததாக தெரியவில்லை. நான் ஒரே சமயத்தில் எந்தவித பிரேக் எடுக்காமல் அந்த படத்தை பார்த்தேன்" என அஸ்வின் தெரிவித்துள்ளார். 

காலம் மாறி விட்டது

மேலும், “நான் சினிமா பார்க்கும் விஷயத்தை உள்ளூணர்வு, வெளியுணர்வாக பிரித்துக் கொள்கிறேன். நாம் என்ன கேட்கிறோம், எதிர்ப்பார்க்கிறோம் என்பதை வெளியுணர்வாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு நடிகரை இப்படி வைத்து படம் எடுத்தால் தான் நன்றாக இருக்கும், இப்படி இருந்தால் நான் பார்க்க மாட்டேன் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும்.

உதாரணமாக ஜெயிலர் படத்தை சொல்லலாம். அதில் ரஜினி முதல் பாதியில் அமைதியாக இருப்பார். அது அவர் ஏற்று நடித்த வயதான கேரக்டராக இருக்கலாம். அவர் அப்படிப்பட்ட கேரக்டரை எதிர்பார்த்து இருக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஒரு காலத்தில் நான் இப்படித்தான் காட்டப்பட வேண்டும் என்ற விஷயம் இருந்தது. இன்று அப்படி இல்லை. கதைக்கேற்றப்படி தன்னை மாற்றிக் கொள்கிறார்கள். இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று" எனவும் அஸ்வின் கூறியுள்ளார்.