நடிகை சுனைனாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


 


கொரோனா தொற்றால்  திரைப்பட பிரபலங்களும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகை சுனைனா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.  காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தெறி, சில்லுக்கருப்பட்டி, ட்ரிப் உள்ளிட்ட படங்களில் நடித்த சுனைனா தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக டுவிட்டர் பக்கத்தில் தகவல் கூறியுள்ளார்.


<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr"><a >pic.twitter.com/NcdvVNdh7k</a></p>&mdash; SUNAINAA (@TheSunainaa) <a >May 10, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


மிகவும் ஜாக்கிரதையாக இருந்தும் தொற்றுக்கு பாதிக்கப்பட்டதாகவும், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திகொண்டதாகவும், தனது குடும்பத்தாரும் தனிமையில் உள்ளதாகவும் கூறினார். மேலும்,  அனைவரும் வீட்டிலேயே இருங்கள்  என்றும், கட்டாயம் முக கவசம் அணியுங்கள் எனவும், அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் எனவும் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.




 


கொரோனா தொற்றுநோயை எதிர்த்து நாடு தொடர்ந்து போராடி வரும் நிலையில் , பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வை , அதிகாரிகள் விழிப்புணர்வு மற்றும் பல வழிகாட்டுதலை மக்களுக்கு வழங்கி வருகின்றனர் . பல நிறுவனங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த தங்கள் முயற்சியைச் செய்து வருகின்றனர் , மேலும் பல பிரபலங்களும் தொடர்ந்து தங்களின் சமூக ஊடக பக்கங்களில் விழிப்புணர்வு வீடியோக்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.


கோலிவுட்டைச் சேர்ந்த சில பிரபலங்களும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை பரப்புவதற்காக ரோட்டரி கிளப்புடன் கைகோர்த்து சமீபத்தில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான வீடியோ ஒன்றை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.