கூலி இசை வெளியீடு 

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 171 ஆவது படமாக உருவாகியுள்ளது கூலி. இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பு நிறைவுக்கு வந்தது. வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி கூலி திரைப்படம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இன்று கூலி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைப்பெற்றது.

கலாநிதி மாறன் பேச்சு:

இந்த நிகழ்வில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் “ரஜினி சார் தான் ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் என்று நாகார்ஜுனா சார் சொன்னார். ஆனால் நான் சொல்வது என்னவென்றால், அவர் OG சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல.. அவர்தான் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார். ரஜினி சார் இன்று போன் செய்தால் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள எந்த முதல்வரும் அவரது அழைப்பை ஏற்பார்.,முதல்வர் மட்டுமல்ல, பிரதமரும் கூட அவரது அழைப்பை ஏற்பார்.அவர்தான் நிஜ வாழ்க்கை சூப்பர் ஸ்டார்.

கடந்த 50 ஆண்டுகளில், பல ஹீரோக்கள் வந்தார்கள், பல ஹீரோக்கள் போனார்கள்,ஆனால் ரஜினி சார் இன்னும் ஒரு சூப்பர் ஸ்டாராகவே இருக்கிறார்.ஜெயிலரில், ரஜினி சார் ஒரு ரெக்கார்ட் படைத்தார்,  கூலியில், அவர் ஜெயிலரின் சாதனையை முறியடிப்பவராக இருப்பார் என்றார். மேலும் பேசிய அவர் இப்போதெல்லாம் இளம் நடிகர்கள் மிகுந்த ஆட்டியுட் காட்டுகின்றனர், ஆனால் நமது சூப்பர் ஸ்டார் மிகவும் பணிவானவர் & எளிமையின் மனிதர் என்றார்.

ஆமீர் கான்

கூலி இசை வெளியீட்டில் பேசிய நடிகர் ஆமிர் கான் " லோகேஷ் கனகராஜ் இந்த படத்தைப் பற்றி சொன்ன போது என்ன கதை ,எவ்வளவு சம்பளம் என எதைப் பற்றியும் நான் கேட்கவில்லை. ஏனென்றால் இது ரஜினி சார் படம் " என கூறினார்,

கூலி டிரெய்லர் 

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் நடித்த நாகர்ஜூனா , ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ் , ஆமிர் கான் ,செளபின் சாஹிர் சார்லீ உள்ளிட்ட அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அனிருத் இசையில் மொத்தம் 8 பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. இத்துடன் கூலி படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகமெங்கிலும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது கூலி.