குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரின் stress buster ஆகவும், மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த ஷோ தான் குக் வித் கோமாளி. மற்ற குக்கிங் நிகழ்ச்சிகளை விட வித்தியாசமாக கோமாளிகளும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை, புகழ், சிவாங்கி, பாலா, சுனிதா போன்ற பல கோமாளிகள் கலந்துக்கொண்டனர். குறிப்பாக மற்ற கோமாளிகளை விட மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் புகழ். இந்நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தாலும் இந்த நிகழ்ச்சி மட்டுமே புகழுக்கு ஏராளமாக ரசிகர்களைப்பெற்று தந்துள்ளது.
இப்படி முதல் சீசன், இரண்டாவது சீசன் என இவரின் லூட்டிகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. முன்னமே சில படங்களில் நடித்த யோகிபாபு, குக்வித் கோமாளி சீசன் 2 விற்கு பிறகு, அஸ்வின் நடித்த என்ன சொல்லப் போகிறாய், அஜித் நடித்த வலிமை, சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களில் கமிட் ஆகி நடித்தார். இப்படி பல சினிமா வாய்ப்புகள் கிடைத்த நிலையில், இந்த சீசன் 3ல் அவரால் பங்கேற்க முடியவில்லை என சொல்லப்பட்டது. இதுவே ரசிகர்கள் பலருக்கு வருத்தமாக இருந்த நிலையில், சீசன் 3 ல் புகழ் வரவேண்டும் என்ற கருத்துக்களை ரசிகர்கள் முன் வைத்தனர்.
இதனையடுத்து மீண்டும் குக் வித் கோமாளியில் ரீ என்ட்ரி கொடுத்தார் புகழ். இதனிடையே அண்மையில் வலிமை படம் ரிலீஸ் ஆனது. அதில் நடித்திருந்த புகழ், மிக மிக சிறிய கதாபாத்திரத்திலேயே நடித்திருந்தார். ஆனால் அதற்கு முன்பே புகழ் அஜித் படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் என்ற பில்டப் அதிகமாக இருந்த நிலையில், இந்த சிறிய கதாபாத்திரத்திற்காகத்தான் இவ்வளவு பில்டப்பா என்று அவரை ட்ரோல் செய்தனர்.
இந்த நிலையில் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார். அதில், நான் எதிலும் தோற்றுப்போவதில்லை! ஒன்று வெற்றி கொள்கின்றேன் இல்லை கற்று கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். ஆனால் இந்தப்பதில் அந்த ட்ரோலுக்கான பதிலா என்பது தெரியவில்லை.