சன் மியூசிக் டி.வி. சேனலில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பல்வெறு நிகழ்ச்சிகளின் மூலம் புகழ்பெற்றவர் மணிமேகலை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலமும் கூட. இவர் பிரபல நடன இயக்குநர் ஹூசைனை காதலித்து திருமண செய்து கொண்டவர். 


இந்நிலையில் மணிமேகலை இஸ்லாம் முறையில் உடை அணிந்திருக்கும் படத்தைப் பகிர்ந்து, “எப்படி ஆரம்பிச்சது.. எப்படி முடிஞ்சிருக்கு பாத்தீங்களா.. லவ்_ஜிகாத். மதமென பிரிந்தது போதும்” என வலதுசாரி ஆதரவாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மணிமேகலை அதில் ஹிஜாப் போல அணிந்திருப்பார். இது சமூக வலைதளத்தில் பேசுப்பொருளானது.


இந்நிலையில் மணிமேகலை பகிர்ந்திருந்த புகைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு, ரம்ஜானுக்கு வாழ்த்து கூறியுள்ள டிவிட்டர் பதிவு.  ஈக் முபாரக் என பதிவு அதோடு இஸ்லாமிய பாரம்பரிய முறையில் உடை அணிவது போன்று இருவரும் காட்சியளிப்பர்.  ”முன்னாடி எல்லாம், நான் எல்லோர் கிட்டையும் பிரியாணி கேட்பேன் ரம்ஜானுக்கு, இப்போ எல்லோரும் என்கிட்ட பிரியாணி கேக்குறாங்க ஒரே நகைச்சுவையா இருக்கு போ... என்று பதிவிட்டிருந்தார்.


மணிமேகலை மதம் மாறிவிட்டார்; லவ் ஜிகாத் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வந்த நிலையில் மணிமேகலை இதற்கு பதிலளித்துள்ளார்." மணிமேகலை ட்விட்டர் பக்கத்தில், யாரும் மதம் மாறவில்லை. ஹுசேன் என்னுடன் கோவிலுக்கு வருவார், நாங்கள் ரம்ஜான் கொண்டாடுவோம். நாங்கள் தெளிவாக இருக்கிறோம் எனப் பதிவிட்டு இருந்தார்.அவரின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மணிமேகலையில் இப்போது வதந்தி பரப்பட்டு வருவதற்கும் பதிலளித்துள்ளார்.  "இப்படி வாழ்க்கை முழுவதும் உளறிக் கொண்டே இருப்பதற்கு, போய் உருப்படுகிற வேலையை பார்க்கலாம் இல்ல” என கேட்டு உள்ளார். அவரின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ள மணிமேகலை, அதற்கான காரணங்களாக ஏதும் சொல்லவில்லை. அதோடு, மணிமேகலை கோவிலுக்கு போகும் புகைப்படங்களையும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் ஆக்டிவாக உள்ளார். பலரும் மணிமேகலையில் பதிலுக்கு ஆதாரவாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். 


மணிமேகலையின் இந்த பதில் மூலம் அவர் மதம் மாறவில்லை என்பது உறுதியாகிவிட்டது என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது அநாகரீகம் என்றும், திரை பிரபலம் என்பதற்காக அவரது மதம், உள்ளிட்ட தனிப்பட்ட விசயங்களை பொதுவெளியில் பேசுவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்று மணிமேகலையின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது வெறுப்பு அரசியில் செய்வதும் தவறானது என்று தெரிவித்து வருகின்றனர்.