விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் தான் ஷிவாங்கி. தன்னுடைய வசிகரமான குரல் மற்றும் வெகுளியான பேச்சினால் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இதனையடுத்து தான் குக் வித் கோமாளியின் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் கோமாளியாக வந்து அசத்தினார் ஷிவாங்கி. அதிலும் சீசன் 2 நிகழ்ச்சியில் தொடர்ந்து 10 முறை அஸ்வினுக்கு ஜோடியாக வந்தது ரசிகர்களை அதிகளவில் ஈர்த்தது. அஸ்வின், ஷிவாங்கி ஜோடி என்றாலே அந்த சீசன் முழுவதும் எப்பொழுதும் குதூகலம் தான். ரசிகர்களும் இவர்கள் ஜோடியாக இணையும் நிகழ்ச்சியினைப் பார்ப்பதற்காகக் காத்திருப்பார்கள். இந்நிலையில் சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டத்திலும் அஸ்வினும் சிவாங்கியும் தான் ஜோடியாக இருந்தனர்.





இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. இதனையடுத்து தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ், பாலா, சிவாங்கி, அஸ்வின், பவித்ரா உள்ளிட்டவர்கள் புகழ் பெற்றனர். அந்த வகையில் சிவாங்கியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் என்ற திரைப்படத்திலும் சிவாங்கி நடித்து வருகிறார். இது ஒருபுறம் இருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர் தான் சிவாங்கி. குறிப்பாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவேற்றுவதோடு, யூடியூபிலும் அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.


இந்நிலையில் தான், இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர், சிவாங்கியிடம் உங்களுக்கு  எப்போது திருமணம் ? என்று கேட்டிருந்தார். அதற்கு சிவாங்கி இன்னும் 8 ஆண்டுகள் கழித்து தான் திருமணம் செய்வேன் என்று பதில் கூறியுள்ளார். இதுக்குறித்து இன்ஸ்கிராம் ரசிகர்கள் பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.


 






குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வின் மற்றும் சிவாங்கி நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் தான், ஷிவாங்கி என்னுடைய நலம் விரும்பி மற்றும் நல்லத் தோழி எனவும் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் அஸ்வின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.