எனது சிறு வயதில் எனக்குப் பாலியல் தொல்லை நடந்தது.. என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் குக் வித் கோமாளி சந்தோஷ் பிரதாப்.
ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில், “சிறு வயதில் நானும் சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். மீ டூ பெண்களுக்கு மட்டுமே நடப்பதில்லை. ஆண்களுக்கும் பாலியல் தொல்லை நடக்கிறது. ஆண்களுக்கு நடக்கும் துயரம் பற்றியும் பேச வேண்டும். என்னை சிறு வயதில் துன்பபடுத்தியவர்களை இப்போதும் நான் பார்க்கிறேன். ஆனால் நான் அவர்களிடம் பேசுவதில்லை” எனத் தெரிவித்தார்.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே பெரும் எதிர்ப்பார்ப்போடு தான் ரசிகர்கள் பார்க்க ஆரம்பிப்பார்கள். அப்படி அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் விக் கோமாளி. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப்பார்க்கக்கூடிய இந்த நிகழ்ச்சி சீசன் 1 மற்றும் சீசன் 2 என வெற்றியைக்கண்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள்.
போட்டியின் பங்கேற்பாளர்களில், பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும் புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் என 10 பிரபலங்கள் கலந்து கொண்டனர். குக் விக் கோமாளின் சீசன் 3 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வெளியேறினார் ராகுல் தாத்தா. அடுத்ததாக இயக்குநர் மனோபாலா வெளியேறினார். இப்போது 8 குக்குகளுடன் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விஜய் டிவிக்கு வந்துவிட்டால் புது முகங்கள் பிரபல முகங்கள் ஆகும், சுமார் முகங்கள் சூப்பர் முகங்களாகும், சூப்பர் முகங்கள் சூப்பர் டூப்பர் முகங்கள் ஆகும். அதுதான், விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களின் மகிமை.
சந்தோஷ் பிரதாப் இது தான் இவரின் சினிமா பெயர். இவர் அரக்கோணத்தைச் சேர்ந்தவர். அப்பா, அம்மா, அக்கா என சிறிய குடும்பம். பி டெக் படித்த இவர் துபாயில் வெஸல் ஆபரேட்டர் பணியில் இருந்தார். இருந்தாலும் சிறு வயதிலிருந்தே இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது.
சிறு வயதிலிருந்தே பள்ளிகளில் சின்ன ஸ்டேஜ் ஷோக்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். ஆசிரியர்களின் பாராட்டு, கமல் சார் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சினிமாவில் நடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் துபாய் வேலையைவிட்டு வந்தவர். சென்னையில் சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கினார். கல்லூரி நாட்களில் மாடலிங் செய்த அனுபவத்தையும், கல்லூரி கலாச்சார நிகழ்ச்சிகளில் பட்டையைக் கிளப்பிய அனுபவத்தையும் கொண்டு கோலிவுட்டில் வாய்ப்பு தேடியுள்ளார். இவர் ஆரம்பத்தில் இருந்தே ஃபிட்நஸ் ஃப்ரீக்காகவே இருந்துள்ளார். கோலிவுட்டில் வாய்ப்புக்காக சுற்றித் திரிந்த இவர் இயக்குநர் பார்த்திபன் கண்களில் பட்டார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் பட வாய்ப்பை பார்த்திபன் கொடுத்தார். 2014ல் வெளியான இந்தப் படம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. விஜய் டிவி விருது நிகழ்ச்சியில் சிறந்த அறிமுக நடிகருக்கான நாமினேஷனில் இடம் பெற்றிருந்தார்.
அதன் பின்னர் தாயம், பயமா இருக்கு, மிஸ்டர் சந்திரமவுலி, பொதுநலன் கருதி, நான் அவளை சந்தித்தபோது, ஓ மை கடவுளே, இரும்பு மனிதன், என் பெயர் ஆனந்தன் ஆகிய படங்களில் நடித்தார். 2021ல் சார்ப்பட்டா பரம்பரையில் இவரது ராமன் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது.
இப்போது மிஷ்கினின் பிசாசு 2 படத்திலும் நடித்து வருகிறார். ஆனந்தம் ஆரம்பம், போலீஸ் டைரி, 2.0, போன்ற வெப் சீரிஸ்களும் செய்துள்ளார். இவர் நன்றாகப் பாடுவாராம், நன்றாக சமைப்பாராம். நன்றாகப் படமும் வரைவாராம்.
இதுதாங்க நம்ம சந்தோஷ் பிரதாப்பின் புரொஃபைல்.
இதெல்லாம் விட முக்கியம் மீடூ இயக்கம் குறித்து அவர் கூறியுள்ள கருத்து. மீ டூ குறித்து இவர் கூறும்போது நானும் சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். மீ டூ பெண்களுக்கு மட்டுமே நடப்பதில்லை. ஆண்களுக்கும் நடக்கிறது. இதைப் பற்றியும் பேச வேண்டும். என்னை சிறு வயதில் துன்படுத்தியவர்களை இப்போதும் நான் பார்க்கிறேன். ஆனால் நான் அவர்களிடம் பேசுவதில்லை என்று கூறியிருக்கிறார்.