சன் மியூஸிக்கில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த அவர் தனது காதலாரன ஹுசைனை வீட்டை எதிர்த்து திருமணம் செய்தார். அவர்களின் காதல் திருமணம் ஊடகங்களின் முக்கியச் செய்தியாகக்கூட இடம் பெற்றது. திருமணத்திற்குப் பின்னர் மணிமேகலை விஜய் டிவிக்கு மாறினார்.


விஜய் டிவிக்கு வந்தவர் தொகுப்பாளினியாக ஜொலிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து, மிஸ்டர், அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிக்களில் மணிமேகலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இதன்மூலம் தனது திறமையையும் வெளிப்படுத்தினார். குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் கோமாளியாக இவர் செய்த நகைச்சுவை ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றது. சீசன் 2 எதிர் பார்த்ததை விட பெரிய ஹிட் ஆனது. மிகவும் கலகலப்பாக இந்த சீசன் நிறைவும் பெற்றதை தொடர்ந்து தற்போது குக்வித் கோமாளி சீசன் 3 யும் போய் கொண்டிருக்கிறது. 


இந்தநிலையில், பெரும்பாலான விஜய் டிவி பிரபலங்கள் விஜய் டிவியில் பங்கேற்பதை தொடர்ந்து தங்களுக்கென ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதில் தாங்கள் செய்யும் அலப்பறைகளை வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர். மேலும், வெளி ஊர்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டும் வருகின்றனர். அந்த வகையில் மணிமேகலை திருச்சிக்கு தனது காரில் தனியாக பயணித்து சென்றுள்ளனர். அது குறித்தான தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் இருந்து திருச்சிக்கு ஒரு நிகழ்வுக்காக எனது காரில் தனியாக பயணித்து சென்றேன். அப்பொழுது, புத்துணர்ச்சி பெற டீக்கடை ஒன்றில்  நிறுத்தினேன். அப்டியே போற வலில டீ கடை அக்காக்கு டீ எப்டி டேஸ்ட் ஆ போடணும் னு கற்று கொடுத்தேன். இந்த  அக்கா வேற CWC ல என்னோட சமையல் திறமைக்கு ரசிகன் ஆம் என்று குறிப்பிட்டு அதற்கான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 






தொலைக்காட்சியில் தனது பணியைத் தாண்டி மணிமேகலை எப்போதுமே தனது ரசிகர்களை எங்கேஜ் ஆக வைத்திருப்பார். அவரது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் ஃபோட்டோக்கள், தானும் தனது கணவரும் அடித்த லூட்டிகள், உள்ளிட்ட பலவற்றை பதிவிடுவது அவரது வழக்கம். அந்த லூட்டிகளை தனது யூடியூப் சேனலிலும் பதிவிட்டு வருகிறார். இவை ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண