Actress Pavithra Lakshmi: தனது தாயின் மறைவு குறித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி எமோஷனலாகப் பேசியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 2வது சீசன் மூலம் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. அதில் பைனல் வரை சென்று கவனம் ஈர்த்த பவித்ராவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக பவித்ரா நடித்தார். பின்னர் மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பவித்ராவின் தாய் உயிரிழந்தார்.
இந்த நிலையில் மறைந்த தனது தாய் குறித்து எமோஷனலாக பவித்ரா பேசியுள்ளார். அதில், “எல்லாரும் சொல்வாங்க. இந்த பெண் தைரியமானவர் என்று. ஆனால், எனக்கு பாக்கெட் மணி வாங்கி வீட்டில் இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால், எனக்கானதை நானே பார்த்துக் கொள்கிறேன். எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமானது. ஆதி, விக்னேஷ் என எல்லாரும் எனக்கு ஒன்னு என்றால் முதலில் வந்து நிற்பாங்க. அம்மா இறந்த போது நான் அவங்க கூட இல்லை. நான் காசியில் இருந்தேன்.
அப்போது என்னோட ஃபிரண்ட்ஸ் தான் அம்மாவை கொண்டு வந்தது, அவங்களுக்கு தேவையான இறுதி காரியங்கள் செய்தது, எல்லாமே என் ஃபிரண்ட்ஸ் தான் செய்தாங்க. அதுக்காக எப்பொழுதும் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வேன். அம்மாக்கு உடம்பு சரியில்லாம இருக்கும்போது எல்லாம் நண்பர்களுக்கு இரவு ஒரு மணிக்கு எல்லாம் கால் செய்து கூப்பிட்டு இருக்கேன். ஆனால், என்னோட நிலைமையை புரிந்து கொண்டு அவர்கள் என்னுடன் ஆதரவாக இருந்து வந்தார்கள்” என கண்கலங்கி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் பவித்ராவின் தாய் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அப்போது எமோஷனல் பதிவு ஒன்றை நடிகை பவித்ரா வெளியிட்டார். அதில், “ நீ என்னை விட்டு பிரிந்து சென்று 7 நாட்கள் ஆகிறது. ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு பிரிந்து சென்றாய் என எனக்கு புரியவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க: Mrunal Thakur: இந்தப் படத்தில் நடிக்கும்போது தாய்மையின் வலி உணர்ந்தேன்: உணர்ச்சிவசப்பட்ட மிருணாள் தாக்கூர்!
Actor Vijay: உக்ரைன் அதிபரை போல தான் விஜய்யின் அரசியல் ஆசை! - இசையமைப்பாளர் வெளியிட்ட பதிவு