மேலும் அறிய

இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசைப் புகழாரம்!

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு திரைப்பயணத்தை கெளரவிக்கும் விதமாக கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து மாபெரும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளன.

சென்னை, மே 16, 2026 — கலாசாரம், சினிமா மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைந்து,  முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து வரும் கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள், WPP புரொடக்ஷனுடன் இணைந்து, இந்திய திரையுலகில் இளையராஜாவின்  50வது ஆண்டு திரையுலக பயணத்தின் நினைவாக ஒரு பிரம்மாண்டமான சினிமா உருவாக்கியுள்ளன.

1976 மே 14ஆம் தேதி வெளியான அன்னக்கிளி திரைப்படம், இந்திய சினிமாவின் ஆன்மாவையே மாற்றியமைத்த இசையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஐம்பது ஆண்டுகள் கடந்தும், 09 மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கும், 9,000க்கும் அதிகமான பாடல்களுக்கும் இசையமைத்துள்ள இளையராஜாவின் படைப்புகள், உலக சினிமா வரலாற்றில் மிக ஆழமான உணர்வுகளையும் கலாச்சார தாக்கத்தையும் ஏற்படுத்திய இசையாகத் திகழ்கின்றன. இந்த விழா ஒரு சாதாரண மைல்கல் அல்ல; மனிதகுலத்திற்கு ஒரே ஒருவரால் வழங்கப்பட்ட அசாதாரண பரிசை கொண்டாடும் தருணமாகும்.

“இளையராஜா சார் இசை என்பது வெறும் பின்னணி இசை அல்ல; அது தலைமுறைகளின் உணர்ச்சி நினைவகம்,” என்று கனெக்ட் மீடியா நிறுவனத்தின் நிறுவனர் வருண் மாதூர் தெரிவித்தார். “அவர் திரையுலகில் 50 அசாதாரண ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், உலகத் தரத்துக்கு இணையான ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அவரது இசை ஒவ்வொரு படத்திலும் சாதித்ததுபோல, இந்த முயற்சியும் உலகத் தரத்திலான படைப்பாற்றலையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைக்கிறது என்றார்.”

இந்த அஞ்சலி, தொழில்துறையில் முன்னணியில் உள்ள AI தொழில்நுட்பங்களும், அடுத்த தலைமுறை திரைப்பட உருவாக்க முறைகளும் பயன்படுத்தப்பட்டு,  உருவாக்கப்பட்ட ஒரு உணர்ச்சி மற்றும் காட்சியமைப்பு நிறைந்த சினிமா அனுபவமாக இருக்கும். உணர்வுகள், சினிமா கதை சொல்லல் மற்றும் காட்சித் தொழில்நுட்ப புதுமைகள் ஆகியவற்றின் மூலம், இளையராஜாவின் ஐம்பது ஆண்டு கால தாக்கத்தை இன்றைய தலைமுறைக்கும் அதே வலிமையுடன் கொண்டு சேர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

“இளையராஜாவின் பாரம்பரியம் என்பது ஒரு இசையமைப்பாளரின் சாதனை மட்டும் அல்ல; அது அரை நூற்றாண்டாக கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழும் உணர்வு,” என்று மெர்குரி குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் குழும தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீராம் பக்திசரண் கூறினார். 

“அந்த பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காக நாளைய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது எங்களுக்கு ஒரு பெருமையும் பொறுப்பும் ஆகும். AI தொழில்நுட்பம் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டுள்ள இந்த காலத்தில், இந்த முயற்சி திரைப்படத் துறையில் புதிய ஆர்வத்தை உருவாக்கும். அதே நேரத்தில், படைப்பாற்றல் கொண்ட கலைஞர்களை புறக்கணிக்காமல், தயாரிப்பு செலவுகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் வாய்ப்பையும் இது வழங்கும்.”

இந்த முயற்சியில் தனது AI மற்றும் படைப்பாற்றல் நிபுணத்துவத்தை வழங்கியுள்ள WPP புரொடக்ஷன், கலாச்சாரத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான புதிய ஒற்றுமையின் அடையாளமாக இதை பார்க்கிறது.

“நிலைத்திருக்கும் சிறந்த படைப்புகள் அனைத்தும் உணர்வு, கலாசாரம் மற்றும் புதுமை ஆகியவற்றின் சந்திப்பில் உருவாகின்றன,” என்று WPP புரொடக்ஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்த்திக் நாகராஜன் கூறினார். 

“இந்த புகழாரம் அதற்கான சிறந்த உதாரணம். இங்கு மிக முன்னேறிய AI தொழில்நுட்பங்கள் வெறும் காட்சிச்சிறப்புக்காக பயன்படுத்தப்படவில்லை; தலைமுறைகள் கடந்து பலரின் வாழ்க்கையின் பின்னணி இசையாக இருந்த ராஜா சார் இசையை கௌரவிக்கவே பயன்படுத்தப்படுகின்றன.”என்றார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

8 மணி நேரம் ஹோட்டலில் வேலை..சமந்தாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா
8 மணி நேரம் ஹோட்டலில் வேலை..சமந்தாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா
Actress Imaya: விஜய் vs உதயநிதி .. யார் உங்க ஃபேவரைட்? .. தங்கம் தென்னரசு மகள் கொடுத்த ஷாக் பதில்!
Actress Imaya: விஜய் vs உதயநிதி .. யார் உங்க ஃபேவரைட்? .. தங்கம் தென்னரசு மகள் கொடுத்த ஷாக் பதில்!
GV Prakash: எக்ஸ் தளத்தில் உதவி கேட்ட ரசிகர்.. 50 ஆயிரத்தை அள்ளிக் கொடுத்த ஜிவி பிரகாஷ்
GV Prakash: எக்ஸ் தளத்தில் உதவி கேட்ட ரசிகர்.. 50 ஆயிரத்தை அள்ளிக் கொடுத்த ஜிவி பிரகாஷ்
நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'டார்க்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா
நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'டார்க்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
"10 லட்ச ரூபாய்க்கு நீட் வினாத்தாள் கசிவா? மோசடி!" ஐஐடி சென்னை இயக்குநர் பகீர்!
Arunraj Vs Udhayanidhi: “சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேச அருகதை இல்லை“: உதயநிதியை விளாசிய அருண்ராஜ்
“சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேச அருகதை இல்லை“: உதயநிதியை விளாசிய அருண்ராஜ்
Thiruchendur Temple : திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.! பக்தர்களுக்கு ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.! பக்தர்களுக்கு ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
தூக்கியடித்த முதல்வர் விஜய்; நான் முதல்வன் திட்டம் மொத்தமாக மாற்றம்- நடந்தது என்ன?
தூக்கியடித்த முதல்வர் விஜய்; நான் முதல்வன் திட்டம் மொத்தமாக மாற்றம்- நடந்தது என்ன?
Chennai Power Cut: சென்னையில ஜூன் 18-ம் தேதி(18.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
சென்னையில ஜூன் 18-ம் தேதி(18.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
’’ஒரு ரூபாய்கூட லஞ்சம் வேணாம்; தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைங்க’’- அமைச்சர் ராஜ்மோகன் உருக்கம்!
’’ஒரு ரூபாய்கூட லஞ்சம் வேணாம்; தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைங்க’’- அமைச்சர் ராஜ்மோகன் உருக்கம்!
தலைகீழாக மாறப்போகுது நம்ம சென்னை! விஜய் சர்க்காரின் '3வது மாஸ்டர் பிளான்' மிரட்டல் அப்டேட்
தலைகீழாக மாறப்போகுது நம்ம சென்னை! விஜய் சர்க்காரின் '3வது மாஸ்டர் பிளான்' மிரட்டல் அப்டேட்
Embed widget