சதீஷ்


தமிழ் படம்  மற்றும்  ஏ.எல் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் சிறு சிறு  கதாபாத்திரத்தில் தோன்றிய சதீஷ் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் பிரபல நகைச்சுவை நடிகராக உருவானார். டைமிங் காமெடிகளின் மூலம் தமிழ் சினிமாவில் நீண்ட நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இதனைத் தொடர்ந்து மான் கராத்தே , தாண்டவம், சிகரம் தொடு , நையாண்டி உள்ளிட்ட படங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த சதீஷ் கத்தி திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார்.


பல்வேறு படங்களில் நடித்து வந்த சதீஷ், அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் நகைச்சுவை நடிகர்களுக்கு நடிகராக நடிக்க வேண்டும் என்கிற ஆசையை தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறதோ என்னவோ. கதாநாயகனாக நடிக்க முடிவு செய்தார் சதீஷ்.


கான்ஜூரிங் கண்ணப்பன்


சதீஷ் கதாநாயகனாக நடிக்க அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் எழுதிய் இயக்கியிருக்கும் திரைப்படம் கான்ஜூரிங் கண்ணப்பன். ஏ.ஜி எஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஹாரர் காமெடியாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, சரண்யா பொன்வண்ணன்  மற்றும் நாஸர் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் ஒடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லரை பார்த்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பாராட்டி வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


இன்ஸ்டா ரீல்






கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் முதல் பாடலான நோபடி ஸ்லீப்ஸ் ஹியல் பாடல் சமீபத்தில் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் படக்குழு ப்ரோமோஷன் வேலைகளைத் தொடங்கி இருக்கிறார்கள். அதன் தொடக்கமாக இன்ஸ்டாகிராமில் தற்சமயம் வைரலாகிக் கொண்டிருக்கும் லுக்கிங் லை ஏ வாவ் என்கிற ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோவில் நடிகர் சதிஷ் , ஆனந்த ராஜ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள்.  இந்த மூன்று நடிகர்களின் காம்பினேஷன் படத்தில் எப்படி இருக்கும் என்பதை இந்த ரில்ஸ் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம் .