பாலிவுட் சினிமாவில் கடந்த மாதம் முழுக்க டாக் ஆஃப் தி டவுனாக இருந்த காதல் பறவைகள்தான் விக்கி கௌசல் மற்றும் கரீனா கபூர் ஜோடிகள் . இவர்கள் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக பாலிவுட் பத்திரிக்கைகள் எழுத தொடங்கிய நிலையில் , அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஜோடிகள் திருமணம் செய்துக்கொண்டனர். அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாக ஷேர் செய்யப்பட்டது . இந்த நிலையில் விக்கி கௌசல் மீது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ஒருவர் காவல்துரையில் புகார் அளித்துள்ளார்.


 






லக்‌ஷ்மன் உத்தேகர் இயக்கத்தில் விக்கி கௌசல் மற்றும் சாரா அலிகான் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. படத்திற்கான பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வ போது வெளியாகி வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு பிறகு விக்கி தற்போது படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். ரொமாண்டிக் காதல் கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் பகுதிகளை சுற்றிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.விக்கி கௌஷல்  படத்திற்காக இந்தூரின் தெருக்களில் தனது சக நடிகரான சாரா அலி கானுடன் பைக்கில் செல்வதை ஜெய் சிங் என்பவர் கண்டிருக்கிறார். 


 







இந்த நிலையில் விக்கி கௌசல் திரைப்பட காட்சி ஒன்றில் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தியிருக்கிறார். அது என்னுடைய வாகனத்தின் நம்பர் பிளேட் என்றும் ஜெய் சிங் யாதவ் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.  இது மேலும் தன்னுடைய அனுமதி இல்லாமல் தனது வாகன எண்ணை பயன்படுத்தியிருப்பதால் விக்கி கௌசல் மீதும் புகார் அளித்துள்ளார்.


இது குறிது பிரபல ANI செய்தி நிறுவனத்திற்கு விளக்கமளித்த  அவர் “ படக் காட்சியில் பயன்படுத்திய வாகன எண் என்னுடையது; படக்குழுவினருக்கு இது தெரியுமா என்று தெரியவில்லை...இது சட்டவிரோதமானது, அனுமதியின்றி எனது நம்பர் பிளேட்டை பயன்படுத்த முடியாது. ஸ்டேஷனில் மெமோராண்டம் கொடுத்துள்ளேன். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.


அதே போல காவல்துறை அதிகாரி ராஜேந்திர சோனி “ எங்களுக்கு புகார் வந்துள்ளது, நம்பர் பிளேட் தவறாக பயன்படுத்தப்பட்டதா என்பதைப் பார்ப்போம். மோட்டார் வாகனச் சட்டத்தில் உள்ள விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். படக்குழு இந்தூரில் இருந்தால், அவர்களை விசாரிக்க முயற்சிப்போம், ”என்று கூறியுள்ளார்.