பிரம்மாண்ட பொருட் செலவில் , மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஹைப் எகிறியுள்ளது.  வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற கல்கியின் நாவலை தழுவியே இந்த படம் உருவாகி வருகிறது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத் குமார், பார்த்திபர், ஐஸ்வர்யா ராய், திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர். படம் குறித்த அப்டேட்டை தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேஷ மாநிலம் ஹரிகேஷ்வரில் திரிஷா, ரகுமான், கார்த்தி உள்ளிட்டவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரமாக அங்கு முகாமிட்டுள்ள படக்குழுவினர்  , 1967 ஆம் ஆண்டு அப்பகுதியை ஆட்சி செய்த ராணி அகில்யாபாயின் கோட்டை மற்றும் அரண்மனை மற்றும் அவரால் உருவாக்கப்பட்ட சிவன் கோவில்களில் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.




இந்நிலையில் ஹரிகேஷ்வரில் நர்மதா நதியின் கரை ஓரங்களில் ஏராளமான சிவ லிங்கம் மற்றும் நந்திகள் அமைந்துள்ள இடத்தில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இங்குள்ள சிவலிங்கம் மற்றும் நந்தி ஆகியவை இந்துக்களால் புனிதமாக பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று நர்மதா நதியில் குந்திதேவி படகில் வருவது போன்ற காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குநர். அப்போது படகிலிருந்து இறங்கி ,கரைகளில் காலணிகளை அணிந்து சிவன் மற்றும் நந்திக்கு குறுக்கே நடந்து சென்றுள்ளார் திரிஷா. இதனை அங்கிருந்த நபர் ஒருவர் புகைப்படம் எடுக்கவே அது தீயாக பரவ ஆரமித்துவிட்டது. இதனையடுத்து தங்களில் நம்பிக்கையை அவமதித்தாக கூறி ஹரிகேஷ்வரில் நடிகை திரிஷா மற்றும் இயக்குநர் மணிரத்தினம் மீது காவல் நிலையத்தில் இந்து அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். 




பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது குதிரை ஒன்று பலியானதைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியம் The Animal Welfare Board of India (AWBI) விரிவான விசாரணை கோரியுள்ளது.முன்னதாக பீட்டா இந்தியா (PETA India) எனும் விலங்குகள் நல வாரியம் ஹைதராபத் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஒரு புகார் அளித்தது. அந்தப் புகாரில், ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் குதிரை ஒன்று பலியானதாக புகார் கூறப்பட்டிருந்தது.அந்த புகாரின் அடிப்படையில் மெட்ராஸ் டாக்கீஸ் மீதும் குதிரையின் உரிமையாளர் மீதும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் Prevention of Cruelty to Animals (PCA)வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் இறந்த குதிரைக்கு அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதாக அப்துல்லாபூர்மெட் காவல்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், குதிரை படப்பிடிப்பு தளத்திலேயே புதைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.