Rajinikanth: ’மாப்ள இவருதான்’ காமெடியை டெவலப் செய்தது ரஜினி.. நடிகர் செந்தில் பகிர்ந்த சுவாரஸ்யம்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து நகைச்சுவை நடிகர் செந்தில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Continues below advertisement

ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்ற டிச.12ஆம் தேதி தன்னுடைய 73ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு சினிமா தவிர்த்து அனைத்து துறைகளையும் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்த்துகளைப் பதிவு செய்தனர். 

Continues below advertisement

ரஜினி பற்றி செந்தில்

இந்நிலையில் கடந்த சில நாள்களாக இணையம் முழுவதும்  நடிகர் ரஜினிகாந்த் பற்றிய பல்வெறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஒவ்விருவரும் தங்களது பார்வையில் ரஜினியின் கதாபாத்திரத்தைப் பற்றி விவரித்திருந்தார்கள் .அந்த வகையில் நகைச்சுவை நடிகர் செந்தில் ரஜினிகாந்த் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த வீடியோக்கள் ட்ரெண்டாகி வருகின்றன.

ரஜினிகாந்த் குறித்து நடிகர் செந்தில் இப்படி கூறியுள்ளார் “நான் ரஜினிகாந்துடன் நிறையப் படங்கள் இணைந்து நடித்திருக்கிறேன். ரஜினி ஒரு நல்ல டைமிங் ஆர்டிஸ்ட். அந்தக் காலத்தில் நவரச நாயகன் என்றால் நடிகர் முத்துராமனை சொல்வார்கள். அது ரஜினிகாந்துக்கும் அப்படியே பொருந்தும். அவரால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும். ஹீரோ , வில்லன், அப்பா, காமெடியன், தாத்தா என எந்த கதாபாத்திரம் என்றாலும் அவரால் சிறப்பாக நடிக்க முடியும்.

காமெடி காட்சிகளை ரஜினிகாந்த் சிறப்பாக மேம்படுத்துவார். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிட்டால் அதில் முழு ஈடுபாட்டுடன் இருப்பார். இரவு முழுவதும் அவர் தூங்கவே மாட்டார். படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் இயக்குநருடன் கலந்து பேசிவிட்டு வருவார். ஆனால் பகலில் அதை எதுவும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். படையப்பா படத்தில் மாப்ள இவருதான் காமெடியில் முதல் ஒரு சில வரிகள் மட்டுமே இருந்தன. அந்தக் காட்சியை பேசி பேசி அவர்தான் டெவலப் செய்தார். ரஜினியின் டைமிங் காமெடி மேல்தட்டு கீழதட்டு என அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும். 

 வீரா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் எனக்கு மாலை போட்டு பொன்னாடை போர்த்திவிட்டார். ரஜினி ஒரு நல்ல மனிதர் , நாம் செய்யும் விஷயம் நன்றாக இருந்தது என்றால் அதை மனதாரப் பாராட்டுவார். அதுவே நன்றாக இல்லையென்றால் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிடுவார்” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

வேட்டையன்

த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்திற்கு வேட்டையன் என்று டைட்டில் வைக்கப்பட்டு அதிகராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ரஜினிகாந்த் இந்தப் படத்தில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து அனிருத் இசையமைக்கிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola