தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானாக திகழ்பவர் நடிகர் கவுண்டமணி. தற்போது வயது மூப்பு காரணமாக படங்களில் அவர் நடிக்காவிட்டாலும் ரஜினி, கமல், விஜய், அஜித், அர்ஜுன், சரத்குமார், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சிம்பு என தமிழ் சினிமாவின் அனைத்து பிரபலங்களுடனும் இணைந்து நடித்துள்ளார். 

Continues below advertisement

3 நாள்தான் கால்ஷீட்:

இவரது காமெடிகளில் நாட்டாமை திரைப்பட காமெடி மிக மிக பிரபலம் ஆகும். அது எப்படி உருவாகியது? என்பதை அப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, 

கவுண்டமணி சார் கதை எல்லாம் கேட்க மாட்டாரு. ரவி. நீ பின்னிடுவ. பாத்துக்கலாம் அப்டினு சொல்லிடுவாரு. அவர்கிட்ட நான் 3 நாள் வாங்கினேன். அவருக்கு தினசரி சம்பளம். 3 நாள் அவருகிட்ட வாங்கிட்டு நாட்டாமை படம் முழுவதும் வருவார். படத்தை பாத்துட்டு அவர் 3 நாள் வாங்கிட்டு டபுள் ஆக்ஷன் எல்லாம் எடுத்து என்ன நினைச்சுட்ட நீ? இனிமே உன் படத்துக்கு தினசரி சம்பளம் கிடையாது. ஒரு பட சம்பளம்தான்.  என்னய்யா 3 நாள் பண்ணிட்டு படம் பூரா வச்சுட்ட?

Continues below advertisement

 

படத்தில் நிறைய முக்கியமான காட்சிகள் எல்லாம் வருவார். தீர்ப்பு சொல்ற இடத்துல வருவாரு. அங்க இந்த கேரக்டரை வச்சு பண்ணிருப்பேன். காலையில இருந்து 4 சீன் எடுத்துட்ட. பசிக்குதுயானு சொல்வாரு. ஒரே ஒரு சீன். இங்க மட்டும் நில்லுங்க சார். ஒரு ஷாக் மட்டும் கொடுங்க. சரத் சார் வாங்கனு எல்லாரையும் வச்சு எடுத்துட்டேன். எதுக்குயா இந்த ஷாக்னு கேட்டாரு. படம் பாருங்க தெரியும்னு சொல்லிட்டேன். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

ப்ளாக்பஸ்டர் வெற்றி:

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது நாட்டாமை. கிராமத்து பின்னணியில் உருவாகிய இந்த படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருப்பார். குஷ்பூ, மீனா, பொன்னம்பலம், கவுண்டமணி, செந்தில், விஜயகுமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். இந்த படம் 100 நாள் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தின் வெற்றிக்கு கவுண்டமணி - செந்தில் காமெடி மிகப்பெரிய பலமாக அமைந்தது. இன்றளவும் தொலைக்காட்சிகளில் இந்த காமெடி பிரபலம் ஆகும். 

நாட்டாமை படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு மற்றும் இந்தியில் விஜயகுமார் வேடத்தில் ரஜினிகாந்தே நடித்திருப்பார். கே.எஸ்.ரவிக்குமாரின் சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, பேண்ட் மாஸ்டர், நாட்டாமை, முத்துக்குளிக்க வரியா, பெரிய குடும்பம், பரம்பரை, சமுத்திரம் ஆகிய படங்களில் கவுண்டமணி நடித்துள்ளார். கவுண்டமணியும் கே.எஸ்.ரவிக்குமாரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.