Comedy Actor Balaji wife : ஆள் நடமாட்டமில்லாத நள்ளிரவில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி தனது எதிர்வீட்டில் கல் எறிந்த சம்பவம் மாதவரம் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாடி பாலாஜியின் மனைவி:
மாதவரம் சாஸ்திரி நகரில் உள்ள இரண்டாவது எக்ஸ்டன்ஷனில் வசித்து வருகிறார் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. இவர் தான் வசிக்கும் வீட்டிற்கு எதிரே தங்கியுள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி வீட்டில் கல் எறிந்துள்ளார். ஓய்வு பெற்ற ஆசிரியருக்கும் தாடி பாலாஜி மனைவி நித்யாவுக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு இருந்துள்ளது.
இந்த சண்டையின் உச்சகட்டமான நிகழ்வாக, ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவில் கல் எறிந்துள்ளார். இது ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் பட்டு கார் கண்ணாடி உடைந்துள்ளது.
தாடி பாலாஜியின் மனைவி கல் எறிந்தது சிசிடிவி கேமராவில் பதிவானதையடுத்து, மாதவரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை கைது செய்த மாதவரம் போலீசார், அவரை எச்சரித்து அதன் பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.