மலாலாவை வம்பிழுத்த ஸ்டாண்ட் அப் காமெடியனைக் கண்டித்தும், மலாலாவை பாராட்டியும் நடிகை பிரியங்கா சோப்ரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


சமூக ஆர்வலரும், நோபல் பரிசு வென்றவருமான மலாலாவை, இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் ஸ்டேண்ட் அப் காமெடியன் ஹசன் மினாஜ் என்பவர் முன்னதாக வம்பிழுக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார்.


அதில் தன்னை மலாலா பின் தொடர்வதாகவும், ஆனால் தான் அவரை பின் தொடரவில்லை என்றும் கேலி செய்யும் தொனியில் பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் விவாதங்களைக் கிளப்பிய நிலையில், இதற்கு எதிர்வினையாற்றும் வகையில்,  ஹசன் மினாஜை  ‘அன்ஃபாலோ செய்யட்டுமா’ அல்லது  ‘வேண்டாமா’ அல்லது ‘யார் இந்த நபர்’ எனும் மூன்று விருப்பங்களைக் கொடுத்து போல் ஒன்றை நடத்தினார் மலாலா. இதில் 39 விழுக்காடு நபர்கள் அன்ஃபாலோ செய்து விடும்படியும், 38 விழுக்காட்டினர் யார் இந்த நபர் என்பதையும் தேர்வு செய்திருந்தனர்.


இதனையடுத்து மீண்டும் மலாலாவை வம்பிழுக்கும்படியாக ஹசன் மினாஜ் தன் இன்ஸ்டா பக்கத்தில் முன்னதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் என்னை மன்னித்து விடுங்கள் மலாலா, என் பேச்சுக்கு அக்டோபர் 5ஆம் தேதி மலாலா பதிலடி தந்தார். தொடர்ந்து என்னை அவர் அன்ஃபாலோ செய்தார். என்னை மன்னித்து விடுங்கள் மலாலா. என்னை மீண்டும் ஃபாலோ செய்யுங்கள்.


ஆனால் நான் உங்களை ஃபாலோ செய்வேனா, இல்லையா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் பெருந்தன்மையற்றவன்” எனப் பேசியுள்ளார்.






இவரது செயல் மீண்டும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், முன்னதாக ஹசன் மினாஜை தான் அன்ஃபாலோ செய்து விட்டதாகவும், தன் கண்ணில் படும்படி அனுப்பியதற்கு நன்றி எனவும் மலாலா  தன் இன்ஸ்டா பக்கத்தில் முன்னதாக பகிர்ந்துள்ளார்.




இந்நிலையில், மலாலாவின் இந்தச் செயலுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா முன்னதாக ஆதரவு தெரிவித்து தன் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.




மேலும் நகைச்சுவை உணர்வோடு இருப்பதைக் காட்டிலும், இந்த நபர் பெருந்தன்மை அற்றவராக இருப்பதையே விரும்புகிறார் என ஹசன் மினாஜைக் கண்டித்தும் பிரியங்கா பதிவிட்டுள்ளார்.