Dire Wolf : 12 ஆயிரம் வருடத்திற்கு முன் அழிந்துபோன ஓநாய் இனத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!
Dire Wolf : 12,500 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன டைர் ஓநாய் இனத்தை அமெரிக்க உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று மறுபடியும் உயிர்பித்துள்ளது

பரினாம வளர்ச்சியின் பகுதியாகவும் மனித செயற்பாடுகள் காரணமாகவும் பல்வேறு உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்து போயிருக்கின்றன. அப்படி அழிந்து போன உயிரினங்களை அவற்றின் மரபனுவை வைத்து மறுபடியும் உயிர்ப்பிக்கும் பல ஆராய்ச்சிகள் இன்றைய சூழலில் நடந்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா டெக்ஸாஸில் உள்ள கொலொசல் பயோசயின்ச் என்கிற உயிரி தொழில்நுட்ப நிறுவனம் அழிந்து போன ஓநாய் இனத்தை மீளுருவாக்க செய்துள்ளது.
மீண்டும் உயிரிபெற்ற டையர் வுல்ஃப் - Dire wolf
Just In




வட அமெரிக்காவில் பரவலாக காணப்பட்ட ஓநாய் இனம் டயர் ஓநாய்கள். சாம்பல் ஓநாய்களை விட இவை அளவில் பெரியவை அதே நேரத்தில் பலமான தாடைகளை கொண்ட விலங்குகள். இந்த ஓநாய்கள் முழுவதுமாக அழிந்து 12, 500 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மரபனுக்களை வைத்து இவற்று மறு உயிர் கொடுத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். 13 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பல் , 72 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டின் மரபனுக்களை மரபனு பொறியியல் மூலம் இரு ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த இரு ஆண் மற்றும் ஒரு பெண் ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளார்கள் . இந்த குட்டிகள் வளர்ந்து பெரிய ஓநாய்களாக மாறி வரும் வீடியோவையும் கொலொசல் நிறுவனம் எக்ஸ் தளத்தி வெளியிட்டுள்ளது. மரபனு பொறியியல் துறையில் இது ஒரு மாபெரும் சாதனையாக கருதப்படுகிறது.