CM Vijays Jana Nayagan Movie Review: முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் FDFS காட்சி முடிவடைந்துள்ள நிலையில், திரைப்படம் ட்விட்டர் ரிவ்யூ கீழே வழங்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஜனநாயகன் திரைப்படம் எப்படி இருக்கு? - விமர்சனம்

முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூரில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்கிய நிலையில், அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் காலை 6 மணிக்கே முதல் காட்சி தொடங்கிவிட்டது. அதன்படி, படத்தின் முதல் நாள் முதல் காட்சி நிறைவடைந்துள்ள நிலையில், ஜனநாயகன் எப்படி இருக்கிறது என படத்தை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஜனநாயகன் ட்விட்டர் விமர்சனம்..!