காஞ்சிபுரம் திரையரங்கில் மோசடி

காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கின் BookMyShow விற்பனை கணக்கை சமீபத்தில் பெரிய வெற்றி பெற்ற படத்தின் விநியோகஸ்தர் cross-check செய்யும் போது அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்ததுள்ளது – •BookMyShow reportன் படி 23,000 டிக்கெட் விற்றள்ளது •திரையரங்கு distributor-க்கு கொடுத்த கணக்கு: 15,000 டிக்கெட் மட்டும் •8,000 டிக்கெட் திருடபட்டுள்ளன •டிக்கெட் விலை ₹150 என்றால் = ₹12 லட்சம் மோசடி (ஒரே படத்தில், ஒரே திரையரங்கில்!) அப்படி என்றால் தமிழகம் முழுவதுவதும் எவ்வளவு மோசடி நடந்திருக்கும்.., ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் படத்தில் எத்தனை கோடிகள் என கற்பனை பண்ணவே முடியவில்லை…!!! இந்த மோசடி வெளிவந்தவுடன் விவரம் கேட்டு சமீபத்துல திரைப்படங்கள் வெளியிட்ட மற்ற எல்லாம் தயாரிப்பாளர்களும் தங்களது படங்களின் கணக்கையும் Book My Show Reportயை வாங்கி சரிபார்த்த போது எல்லாம் திரைபடத்திலும் 5,000 – 20,000 டிக்கெட் வரை அந்த திரையரங்குகளில் திருடியது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை சமூக வலைதள பிரபலம் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.