மேலும் அறிய

Cinema News Today LIVE : ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்ட ராம் சரண்!

சினிமா வட்டாரத்தில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை பற்றி உடனுக்குடன் அப்டேட் இங்கே!

LIVE

Key Events
Cinema News Today LIVE :  ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்ட ராம் சரண்!

Background

நடிகர் விஜய்யின் வாரிசு உட்பட பல மொழிகளில் வெளியான திரைப்படங்கள், தொடர்கள் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கொரோனா காலக்கட்டத்திற்குப் பின் இந்தியாவில் ஓடிடி தளங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. தியேட்டர்களில் எந்தப்படம் ரிலீஸ் ஆகிறது என்பதைப் போலவே ஒவ்வொரு வாரமும் எந்த படம் ஓடிடி.,யில் ரிலீஸாகிறது என்பதை அறிய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை சரியாக கணித்துக் கொண்ட நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்ற ஓடிடி தளங்கள் சமீப காலமாக அதிகளவிலான தொடர்கள் மற்றும் படங்களை வெளியிட்டு வருகிறது. 

வாரிசு 

வம்சி பைடிபள்ளி இயக்கிய  வாரிசு படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக விஜய்யும், ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருந்தனர்.  மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இணைந்திருந்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வசூலில் ரூ.300 கோடியை தொட்ட இப்படம் பிப்ரவரி 22 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. 

வீரசிம்ஹா ரெட்டி 

தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் வீர சிம்ஹா ரெட்டி. கோபிசந்த் மலினினி இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில், ஸ்ருதிஹாசன், வரலட்சுமி, ஹனிரோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வீரசிம்ஹா ரெட்டி படம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இதனிடையே  இப்படம் டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகிறது. 

தங்கம் 

திருச்சூரில் தங்க வர்த்தகத்தில் பணிபுரியும் மூன்று நண்பர்களை மையமாக வைத்து மலையாளத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் தங்கம். இப்படத்தில் பிஜு மேனன், வினீத் ஸ்ரீனிவாசன், மற்றும் வினீத் தட்டில் டேவிட் ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜனவரி 25ந் தேதி திரையரங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பிப்ரவரி 22 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. 

நண்பகல் நேரத்து மயக்கம் 

மலையாளத்தில் கடந்த மாதம் 19 ஆம்  தேதி லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான  படம் நண்பகல் நேரத்து மயக்கம். இப்படத்தில் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் நெட்ஃபிளிக்ஸில் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகிறது. 

We Have a Ghost 

ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் லேண்டன் இயக்கத்தில் டேவிட் ஹார்பர், ஜெனிஃபர் கோலிட்ஜ், ஆண்டனி மேக்கே உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் We Have a Ghost.வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் பேயிடம் இருந்து ஒரு குடும்பம் எப்படி தப்பிக்கிறது என்பதே இதன் கதையாகும். பிப்ரவரி 24 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் இப்படம் வெளியாகிறது. 

அதுமட்டுமல்லாமல் டிஸ்னி ஹாட் ஸ்டாரில்,  ஆதித்யா ராய் கபூர் நடித்த தி நைட் மேனேஜர், ஹன்சிகாவின் கல்யாண சீரிஸான லவ் ஷாதி டிராமா ஆகிய தொடர்களும் ஒளிபரப்பாகிறது. மேலும் ஆபரேஷன் ஃபைனல் (நெட்பிளிக்ஸ்), கால் இட் லவ் (ஹாட் ஸ்டார்), ஸ்னோஃபால் சீசன் 6 (ஹாட் ஸ்டார்), தி கன்சல்டண்ட் (அமேசான்) என படங்களும், தொடர்களும் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.  

18:56 PM (IST)  •  21 Feb 2023

Ram charan : ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்ட ராம் சரண்!

தற்போது, ஆஸ்கர் விருது விழாவில் பங்குபெற ராம் சரண் அமெரிக்காவிற்கு செல்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது. ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்ட ராம் சரணின் புகைப்படங்களும் வைரல் ஆகி வருகிறது.

16:40 PM (IST)  •  21 Feb 2023

AK 62 : இணையத்தை வட்டமடிக்கும் ஏகே 62 குறித்த தகவல்!

ஏகே 62 படக்குழுவினர் குறித்த தகவலும், படத்தின் டைட்டிலும் லைகா நிறுவனத்தின் சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தை மகிழ்திருமேணி இயக்க, அனிரூத் இசையமைப்பார் என சொல்லப்பட்டு வருகிறது. அத்துடன் வில்லன் கதாபாத்திரத்தில், அருண் விஜய் அல்லது அருள்நிதி நடிப்பார் என்றும் தகவல் பரவிவருகிறது.

15:15 PM (IST)  •  21 Feb 2023

Legend saravanan : காஷ்மீரீல் லெஜண்ட் சரவணன்!

லியோ படத்தின் ஷூட்டிங் நடக்கும் காஷ்மீரில் லெஜண்ட் சரவணன் உள்ளார்.

13:24 PM (IST)  •  21 Feb 2023

1000 Crores Club : இந்திய சினிமாவின் 1000 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்த பதான்!

ஷாருக்கான் நடித்த பதான் படம், 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இதன் மூலம், இந்திய சினிமாவின் 1000 கோடி ரூபாய் க்ளப்பில் இடம்பெற்ற தங்கல், பாகுபலி 2, ஆர் ஆர் ஆர், கே.ஜி.எஃப் 2 வரிசையில் பதான் படமும் இணைந்துள்ளது.

13:20 PM (IST)  •  21 Feb 2023

Mouni roy : சிறந்த வில்லன் நடிகைக்கான விருதை பெற்ற மெளனி ராய்

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், பிரம்மாஸ்திரா (பாகம்) படத்திற்காக சிறந்த வில்லன் நடிகைக்கான விருதை மெளனி ராய் பெற்றுள்ளார்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
"கோமாவில் இருந்து மீண்டதும் என் மகன் சொன்ன முதல் வார்த்தை விஜய்..." விஜய் பற்றி நடிகர் நாசர்
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Breaking News LIVE:ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது
Breaking News LIVE:ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
"கோமாவில் இருந்து மீண்டதும் என் மகன் சொன்ன முதல் வார்த்தை விஜய்..." விஜய் பற்றி நடிகர் நாசர்
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Breaking News LIVE:ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது
Breaking News LIVE:ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது
Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?
Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?
Lottery: ஒரே இரவில் கோடீஸ்வரரான வாட்ச்மேன் - இந்தியருக்கு அபுதாபியில் அடித்த ஜாக்பாட்..! நடந்தது என்ன?
Lottery: ஒரே இரவில் கோடீஸ்வரரான வாட்ச்மேன் - இந்தியருக்கு அபுதாபியில் அடித்த ஜாக்பாட்..! நடந்தது என்ன?
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Embed widget