Cinema News Today LIVE : ஏப்ரல் 14 அன்று வெளியாகும் பிச்சைக்காரன் 2 படம்!
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடக்கும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்வுகள் குறித்த அப்டேட்கள் இங்கே!
LIVE
Background
காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் தன்னிடம் நடந்து கொண்டது குறித்து மிஸ்கின் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
மிஷ்கின் பதிவு:
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். “இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன்.... minus 12 டிகிரியில் 500 பேர் கொண்ட Leo படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். Assistant director-களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான், என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன், அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். Leo திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும். அன்புடன் மிஷ்கின்” என குறிப்பிட்டுள்ளார்.
லியோ திரைப்படம்:
விஜய் - லோகேஷ் கனகராஜ் மற்றும் லலித் கூட்டணி லியோ படத்திற்காக இரண்டாவது முறையாக சேர்ந்துள்ளது. இந்த கூட்டணியின் மாஸ்டர் படத்தை போன்று லியோ படத்திற்கும் அனிருத் இசையமைக்க, இயக்குனர் ரத்னகுமர் வசனகர்த்தாவாக பணியாற்றுகிறார். சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மிஸ்கின், பிரியா ஆனந்த் மற்றும் சாண்டி மாஸ்டர் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது. லோகேஷ் கனகராஜின் கைதி மற்றும், விக்ரம் ஆகிய திரைப்படங்களுடன் தொடர்புடைய, லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஷில் லோகேஷ் படமும் இணையும் என கூறப்படுவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
காஷ்மீரில் படப்பிடிப்பு:
லியோ படத்திற்கான பூஜை சென்னையில் எளிமையாக நடைபெற்று, படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. அதைதொடர்ந்து, இரண்டு தனி விமானங்கள் மூலம் லியோ படக்குழு காஷ்மீர் சென்று படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளது. அங்கு சண்டை உள்ளிட்ட பல்வேறு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான், தனக்கு தொடர்பான சண்டை காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டதாக மிஸ்கின் கூறியுள்ளார். அவர் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், மிஷ்கின் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், லியோ படத்தின் கிளைமேக்ஸ் காஷ்மீரில் நடைபெறும் என சில தகவல்கள் இப்போது பரவ தொடங்கியுள்ளன. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளது.
Pichaikkaran 2 : ஏப்ரல் 14 அன்று வெளியாகும் பிச்சைக்காரன் 2
விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்கு பின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. பிச்சைக்காரன் 2 படம், வருகிற ஏப்ரல் 14 அன்று வெளியாகவுள்ளது.
Dhanush : நடிகர் தனுஷ் வழக்கு - வேறு நீதிபதி முன் பட்டியலிட ஆணை
நடிகர் தனுஷ் தன் மகன் என மேலூர் கதிரேசன் தொடர்ந்த வழக்கை வேறு நீதிபதி முன் பட்டியலிட உத்தரவு
Ant Man And The Wasp : ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப் படத்தின் வசூல்
ஹாலிவுட் படமான ஆன்ட்- மேன் அண்ட் த வாஸ்ப், இதுவரை உலகளவில் 300 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது.
Selfiee : 10 கோடி ரூபாயை வசூல் செய்த அக்ஷய் குமாரின் படம்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் நடிப்பில் வெளிவந்த செல்ஃபி படம், மூன்று நாட்களில் 10 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.
Mammootty : மம்மூட்டியின் அடுத்த படம் என்ன?
மலையாள நடிகர் மம்மூட்டியின் நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்போது, மம்மூட்டி அடுத்ததாக கண்ணூர் ஸ்குவாட் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.