Cinema News Today LIVE : மகன் ஆத்விக்குடன் ஷாலினி அஜித்குமார்!
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடக்கும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்வுகள் குறித்த அப்டேட்கள் இங்கே!
LIVE
Background
2005ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கிய இப்படம் 700 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி தமிழ் சினிமாவில் மிகப்பெரும் சாதனை படைத்தது.
சந்திரமுகி 2
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
மேலும் ராதிகா சரத்குமார், வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே, சுரேஷ் மேனன், மஹிமா நம்பியார், என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்கிறார்.
லட்சுமி மேனன் ரீ எண்ட்ரி
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து படக்குழு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியானது. இந்நிலையில், இந்த ஃபோட்டோவில் நடிகை லட்சுமி மேனன் இடம்பெற்றுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மலையாளத் திரையுலகில் இருந்து கோலிவுட்டு வந்து தமிழ் ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர்களுள் முக்கியமானவர் நடிகை லட்சுமி மேனன். சசிகுமார் ஜோடியா சுந்தர பாண்டியன் படத்தில் அறிமுகமான லட்சுமி மேனன், கும்கி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம்பிடித்தார்.
உற்சாகத்தில் ரசிகர்கள்
ஆனால், இறுதியாக முத்தையா இயக்கிய புலிக்குத்தி பாண்டி, ஏஜிபி ஸ்கிசோஃபெர்னியா உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு அவரை கோலிவுட்டில் காணவில்லை.
எனினும் இன்ஸ்டாவில் தொடர்ந்து தன் ரசிகர்களுக்கு தரிசனம் தந்து வந்த லட்சுமி மேனன் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திரமுகி 2 படம் மூலம் ரீ எண்ட்ரி தரும் நிலையில், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சந்திரமுகி 2 படத்தில் முன்னதாக காஜல் அகர்வால் நடிப்பதாகத் தகவல் பரவிய நிலையில், தற்போது இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.
Vj Maheshwari : விஜே மகேஸ்வரியன் புடவை க்ளிக்ஸ்!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜே மகேஸ்வரியின் புடவை க்ளிக்ஸ்
Shalini Ajith Kumar : மகன் ஆத்விக்குடன் ஷாலினி!
சென்னையின் எஃப்.சி மைதானத்தில், மகன் ஆத்விக்குடன் ஷாலினி அஜித்குமாரின் புகைப்படம்
Vani Bhojan : வாணி போஜனின் லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைல்!
Boney kapoor : அரிய புகைப்படத்தை வெளியிட்ட போனி கபூர்
நடிகை ஸ்ரீ தேவியின் ஐந்தாவது நினைவு நாளையொட்டி, அவரது கணவர் போனி கபூர் அரிதான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Yash : தினேஷ் கார்த்திக்குடன் யஷ்!
கே.ஜி.எஃப் நாயகன் யஷ், தினேஷ் கார்த்திக்குடன் எடுத்து கொண்ட புகைப்படம்