இந்தியன் 2 ரிலீஸ்:


ஷங்கர் இயக்கி கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் இன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்கில் வெளியாகி பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டைக் காட்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ரசிகர்களையும் இந்தியன் 2 படம் வெகுவாக கவர்ந்துள்ளது. வெளியான முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பும் 'இந்தியன் 2 ' இதுவரையில் ரூ. 8.44 கோடிக்கு நிகரான வசூலை எட்டியுள்ளது என பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டுமே ரூ.5 கோடி 80 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அர்ஜூன் தாஸ் - அதிதி ஷங்கர் :


மில்லியன் டாலர் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் கூட்டணியில்  உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


சுந்தர்.சியின் மத கஜ ராஜா :


2012ம் ஆண்டு ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் மற்றும் விஷாலின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்த 'மத கஜ ராஜா' திரைப்படம் ஒரு நிதி பற்றாக்குறை காரணமாக வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, சோனு சூட், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும்  ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சீமான் - கமல் :


கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகி இன்று திரையரங்கில் வெளியான 'இந்தியன் 2 ' படத்தை நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இருவரும் ரோகிணி திரையரங்கத்தில் பார்க்க அவர்களுடன் சேர்ந்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் இந்தியன் 2 படத்தினை பார்த்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் விரலாக பகிரப்பட்டது. 


மீண்டும் பாலிவுட்டில் தனுஷ் :


தனுஷின் ராயன் மற்றும் குபேரா படங்கள் வெளியாகவுள்ள நிலையில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ’தேரே இஷ்க் மே’ என்ற இந்தி படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த கூட்டணி ராஞ்சனா மற்றும் அத்ரங்கி ரே படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக கூட்டணி சேர்கிறது.  இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.