சுந்தர்.சி பலே ஆளு .. வசூலை அள்ளும் அரண்மனை 4 .. 2 நாட்களில் இத்தனை கோடி வசூலா?


சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்புடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் இணைந்துள்ள திரைப்படம் அரண்மனை 4. சுந்தர் சி இயக்கத்தில் பேய் பட சீரிஸாக வெளியாகி வரும் இப்படத்தின் 4ஆம் பாகம் நேற்று முன் தினம் வெளியான நிலையில், இப்படத்தின் 2 நாள் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் முதல் நாள் 4.15 கோடிகளையும், இரண்டாம் நாள் 6.42 கோடிகளையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


என்ன ஒரு மகிழ்ச்சி! பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்ட த்ரிஷா!


நடிகை த்ரிஷா தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் 22 ஆண்டுகளுக்கு மேல் கோலோச்சி வரும் நடிகை த்ரிஷா, நேற்று தன் 41ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியதுடன் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தன் பிறந்தநாள் புகைப்படங்கள் உடன் கடவுள் சாய் பாபாவின் புகைப்படங்களையும் இணைத்துப் பதிவிட்டுள்ளார்.


பிரதீப் ரங்கநாதன் ஹீரோ.. ஓ மை கடவுளே பட இயக்குநரின் அடுத்த படம்: கலக்கல் அப்டேட்!


கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், தன் முதல் படமான லவ் டுடே திரைப்படம் மூலம் கோலிவுட்டின் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பாக்ஸ்ஆஃபிஸ் ஹிட் கொடுத்தார், தொடர்ந்து ஹீரோவாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது எல்.ஐ.சி படத்தில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்குநர் அஸ்வத் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மீண்டும்.. மீண்டுமா? - கமல்ஹாசனின் இந்தியன் 2 ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!


கமல்ஹாசன் - ஷங்கர் இணைய பல ஆண்டுகளாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்காக முயற்சிகள் தொடங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நிகழ்ந்த ஊரடங்கு, படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து, இயக்குநர் ஷங்கர் - தயாரிப்பு நிறுவனம் இடையேயான பிரச்னை என பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.


சீதை மாதிரி என்னை நிரூபிக்க வேண்டியுள்ளது.. ஜாஃபர் சாதிக் பிரச்சினையில் அமீர் வேதனை!


மூன் பிக்சர்ஸ் சார்பில், ஆதம்பாவா தயாரிப்பில்  அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள படம் “உயிர் தமிழுக்கு”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு முன்னதாக நடைபெற்ற நிலையில், அவரிடம் ஜாஃபர் சாதிக் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர்,“ ஜாஃபர் சாதிக்கை பொதுவெளியில் என் தம்பி சொன்னேன். அவர் மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். அவரை எனக்கு 10 ஆண்டுகளாக தெரியும். ஜாஃபர் சாதிக்கிற்கும் எனக்கும் தொடர்பு இருக்கு. ஆனால் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை” எனப் பேசினார்.