திரையுலகில் நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றாகப் பணியாற்றும்போது நட்பு காதலாக மாறுவதும், பின்னர் திருமணத்தில் முடிவதும் புதிதல்ல. அப்படி தங்களது படங்களில் பணியாற்றியவர்களை காதலித்து திருமணம் செய்தவர்கள் தான் பவன் கல்யாண், இயக்குநர் விஷ்ணுவர்தன், மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர். ஆனால் இவர்கள் காதலித்து திருமணம் செய்த பெண்களுக்கு ஒரு தனி ஒற்றுமை இருக்கிறது. அவர்கள் அனைவரும் ஆடை வடிவமைப்பாளர்கள் என்பதே இந்த ஒற்றுமை.

Continues below advertisement

பவன் கல்யாண் – ரேணு தேசாய்

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிகையும் ஆடை வடிவமைப்பாளருமான ரேணு தேசாயைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் 'பத்ரி' படத்தில் இணைந்து நடித்தபோது காதலில் விழுந்தனர். தொடர்ந்து 'ஜானி' படத்திலும் இணைந்து பணியாற்றினர். அந்தப் படத்தில் ரேணு தேசாய் ஆடை வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங் பணிகளிலும் ஈடுபட்டார். இருவரும் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், 2012ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

விஷ்ணுவர்தன் – அனு வர்தன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன், ஆடை வடிவமைப்பாளர் அனு வர்தனைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் படித்தபோது அறிமுகமாகினர். பின்னர் இயக்குநர் சந்தோஷ் சிவனிடம் இணைந்து பணியாற்றியுள்ளனர். விஷ்ணுவர்தனின் 'பில்லா', 'சர்வம்', 'ஆரம்பம்' உள்ளிட்ட படங்களுக்கு அனு வர்தன் ஆடை வடிவமைப்பு செய்துள்ளார். கல்லூரிக் காலத்திலேயே தொடங்கிய இவர்களது நட்பு திருமணத்தில் முடிந்தது.

Continues below advertisement

மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா

நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவைத் திருமணம் செய்துகொண்டார். 'ஜில்லா', 'ராஜதந்திரம்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஜாய் கிரிசில்டா, தமிழ் திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக அறியப்படுகிறார். இவர் முன்னதாக 'பொன்மகள் வந்தாள்' படத்தின் இயக்குநர் ஜே.ஜே. பிரெட்ரிக்கைத் திருமணம் செய்திருந்தார். பின்னர் இருவரும் பிரிந்த நிலையில், 2025ஆம் ஆண்டு மாதம்பட்டி ரங்கராஜுடன் தனது திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

ஆதிக் ரவிச்சந்திரன் – ஐஸ்வர்யா பிரபு

'மார்க் ஆண்டனி’ , ‘குட் பேட் அக்லி’  உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன். இவர் நடிகர் பிரபுவின் மகளும், நடிகர் விக்ரம் பிரபுவின் சகோதரியுமான ஐஸ்வர்யா பிரபுவை கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். ஐஸ்வர்யா பிரபு ஒரு தொழில்முறை பேக்கர் மட்டுமின்றி ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சென்னையில் 'மெல்ட்ஸ் டெசர்ட்ஸ்' (Meltz Dessertz) என்ற பேக்கரி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 'தலைவி', 'வானம் கொட்டட்டும்', 'மார்க் ஆண்டனி' உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஆடை வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.