வீர் தீர சூரன் பட தயாரிப்பாளருக்கு 19 வயதா ? யார் இந்த ரியா ஷிபு ?
ஒரு பக்கம் இன்ஸ்டாகிராம் பிரபலம் , இன்னொரு பக்கம் கல்லூரி மாணவி இன்னொரு பக்கம் தயாரிப்பாளராக கலக்கி வருகிறார் ரியா ஷிபு

வீர தீர சூரன்
எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் வீர தீர சூரன். எஸ்.ஜே சூர்யா , சூரஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எச்.ஆர் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் மார்ச் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது
இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் ரியா ஷிபுவை நடிகர் விக்ரம் பாராட்டி பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
வீர தீர சூரன் படத்தை தயாரித்துள்ள எச்.ஆர் பிக்ச்சர்ஸ் இதற்கு முன்பாக மாமனிதன் , ஆர்.ஆர்.ஆர் , டான் , விக்ரம் , விடுதலை ஆகிய படங்களை விநியோகம் செய்துள்ளது. தக்ஸ் , மும்பைக்கார், மூரா ஆகிய படங்களை தயாரித்துள்ளது. எச்.ஆர் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் நான்காவது படம் வீர தீர சூரன். இத்தயாரிப்பு நிறுவனத்திற்கு பின் இருப்பது 19 வயது கல்லூரி மாணவி என்பது பலருக்கு ஆச்சரியத்தை தரும் செய்தியாக இருக்கலாம்.
யார் இந்த ரியா ஷிபு
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரியா ஷிபு இன்ஸ்டாகிராமில் தற்போது சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சின்ன சின்ன சுவாரஸ்யமான ரீல்ஸ்களை வெளியிட்டு வந்த ரியா ஷிபு திடீரென்று பட்டி தொட்டி எங்கும் வைரலனார். ஒரு பக்கம் படிப்பு இன்னொரு பக்கம் இன்ஸ்டாகிராம் பிரபலம் இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் என பல வேலைகளை அசால்ட்டாக 19 வயதில் ஹேண்டிள் செய்து வருகிறார் ரியா ஷிபு. இது எல்லாம் தவிர்த்து கப்ஸ் என்கிற மலையாள படத்தில் நாயகியாக நடிக்கவும் செய்துள்ளார்.