தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும் பிரபலமாக இருப்பவர் சீயான் விக்ரம். கதைக்காகவும் , கதாபாத்திரத்திற்காகவும் உயிரை பணையம் வைக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடிக்கக்கூடிய மகா கலைஞன் என பெயர் எடுத்தவர். விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு, பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், தோல்வியை சந்தித்தது.
இந்த படத்தின் தோல்விக்கு, திரைப்படத்தின் கதைக்களத்தை நேர்த்தியாக கொண்டு செல்லாதது தான் காரணம் எனக் கூறப்பட்டது. அதேசமயம் ஜிவி பிரகாஷின் இசை, விக்ரமின் உழைப்பு, பார்வதியின் எதார்த்தமான நடிப்பு, மாளவிகா மோகனின் திறமை போன்றவை அனைத்து தரப்பிலும் பாராட்டப்பட்டது.
இந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து விக்ரம், இயக்குனர் எஸ் யூ அருண்குமார் இயக்கத்தில் 'வீர தீர சூரன்' படத்தில் நடிக்க கமிட்டானார். இரண்டு பாகமாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்னர், இரண்டாவது பாகத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி இன்று காலை 9 மணிக்கு ஸ்பெஷல் ஷோ திரையிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக டெல்லி உயர்நீதி மன்றத்தில், தொடர்ந்த வழக்கால் இந்த படத்திற்கு தடை போடும் நிலை உருவானது.
இதைத்தொடர்ந்து இன்று மாலை 6:00 மணிக்கு இருதரப்பிலும் சுமூக பிரச்சனை எட்டவே, படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ளார். மேலும் விக்ரம் அதிரடி ஆக்சன் களத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா எஸ் பி கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க, மலையாள நடிகர் சுராஜ் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
இன்று மாலை 6:00 மணிக்கு ரிலீஸ் ஆன 'வீர தீர சூரன்' படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் ட்விட்டரில் கூறியுள்ள விமர்சனம் இதோ...